- Home
- Gallery
- 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டிராபியை வென்ற இந்தியா- தோனியின் சாதனை பட்டியலில் இடம் பிடித்த ரோகித்!
17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டிராபியை வென்ற இந்தியா- தோனியின் சாதனை பட்டியலில் இடம் பிடித்த ரோகித்!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக இந்தியா டிராபியை வென்றுள்ளது.

India vs South Africa Final, T20 World Cup 2024
பார்படாஸில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது. இதில் அக்ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
India vs South Africa, T20 World Cup 2024
இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்ததன் மூலமாக பல சாதனைகளை படைத்தார். இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய கோலி மொத்தமாக 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய போட்டியில் 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். மேலும், கடைசியாக கோலி விளையாடிய 10 டி20 போட்டிகளில் முதல் அரைசதம் இதுவாகும்.
T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில் 77* ரன்கள் எடுத்திருந்தார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெதுவாக அரைசதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையையும் கோலி படைத்தார்.
IND vs SA Final T20 World Cup 2024
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு குயீண்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்கவே, டி காக் 39 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்.
IND vs SA Final, T20 World Cup 2024
அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லர் மார்கோ யான்சென் இருவரும் விளையாடினர். இதில், பும்ரா கடைசியில் யான்சென் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.
IND vs SA T20 World Cup Final
அதன் பிறகு கேசவ் மஹராஜ் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மில்லர் ஸ்டிரைக்கில் நின்றார். முதல் பந்தில் சிக்ஸருக்கு முயற்சிக்க பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
T20 World Cup 2024 Final
அப்போதே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. அதன் பிறகு வந்த கஜிஸோ ரபாடா 5ஆவது பந்தில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
IND vs SA Final, T20 World Cup 2024
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இறுதிப் போட்டி உள்பட இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி புதிய சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
T20 World Cup 2024 Champion
இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு 2அவது முறையாக டிராபியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற கோலி அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.