திமுக அமைச்சர்கள் மீதான தீர்ப்பு குறித்து விவாதம் நடத்த பயமா? நீதிபதி சொன்னது என்ன? அம்பலப்படுத்தும் பாஜக!
ஒரு தீர்ப்பு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற தீர்ப்பு உதாரணம், அதிகாரிகளின் துணையோடு இந்த வழக்கை எப்படி முடித்தார்கள் என்றெல்லாம் தெளிவாக, விரிவாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
Narayanan Thirupathy
இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் அளித்த தீர்ப்பானது வரலாற்று சிறப்பு மிக்கது. 2006-11 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த இருவர் மீதும் 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், 2022ம் ஆண்டு குற்றம் சாட்டிய அதே லஞ்ச ஒழிப்பு துறை இவர்கள் குற்றமே செய்யவில்லை என்கிற ரீதியில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இவர்களை விடுவிக்க கோரியதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இவர்களை விடுவித்தது.
Justice Anand venkatesh
இந்நிலையில், கடந்த வருடம் தாமாகவே முன்வந்து இதற்கு எதிரான வழக்கை பதிவு செய்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, மீண்டும் இவ்வழக்கை தீர விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
KKSSR Ramachandran Thangam Thennarasu
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், அரசுத்தரப்பும் ஒன்றாக இணைந்து செயல்பட்டதாக நீதியரசர் குற்றம் சாட்டியுள்ளதோடு, ஒரே நாளில் எப்படி ஒரே மாதிரியான மனுவை பல்வேறு வழக்குகளில் அரசுத்தரப்பு தாக்கல் செய்யும்? லஞ்ச ஒழிப்பு துறையும், அரசியல்வாதிகளும் இணைந்து அதிகார துஷ்பிரயோகத்தில் எவ்வாறு ஈடுபட்டுள்ளார்கள்?
Narayanan Thirupathy Vs DMK
ஒரு தீர்ப்பு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற தீர்ப்பு உதாரணம், அதிகாரிகளின் துணையோடு இந்த வழக்கை எப்படி முடித்தார்கள் என்றெல்லாம் தெளிவாக, விரிவாக குறிப்பிட்டுள்ளார். கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், பரபரப்பான இந்த தீர்ப்பு குறித்து, எந்த ஒரு தொலைக்காட்சியும் விவாதங்கள் நடத்தி மக்களுக்கு எடுத்து செல்லாதது ஏன்? பயமா? பாசமா? ஓ! திமுகவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ? வாழ்க ஜனநாயகம், வளர்க தமிழக ஊடக தர்மம் என கூறியுள்ளார்.