உகாண்டாவை கதற கதற அடித்து ஓட விட்ட குர்பாஸ், ஜத்ரன் – ஆப்கானிஸ்தான் 183 ரன்கள் குவிப்பு!
உகாண்டா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 5ஆவது போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது.

Afghanistan vs Uganda
ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 5ஆவது போட்டி தற்போது கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது.
Afghanistan vs Uganda
ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. இப்ராகிம் ஜத்ரன் 70 ரன்களில் ஆட்டமிழக்க, குர்பாஸ் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நஜிபுல்லா ஜத்ரன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Afghanistan vs Uganda
குல்பதீன் நைப் 4, அஸ்மதுல்லா உமர்சாய் 5 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க முகமது நபி 14 ரன்களும், ரஷீத் கான் 2 ரன்களும் எடுக்கவே ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது.
Afghanistan vs Uganda
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜத்ரன், குல்பதீன் நைப், அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரன், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
Afghanistan vs Uganda
உகாண்டா:
சைமன் செஸாசி (விக்கெட் கீப்பர்), ரோஜர் முகாஸா, ரோனக் படேல், ரியசத் அலி ஷா, தினேஷ் நக்ரானி, ராபின்சன் ஒபுயா, அல்பேஷ் ரம்ஜானி, பிரையன் மசாபா (கேப்டன்), பிலால் ஹாசன், காஸ்மாஸ் கியூட்டா, ஹென்றி செனியோண்டா.
Afghanistan vs Uganda
பவுலிங்கைப் பொறுத்த வரையில் காஸ்மாஸ் கியூட்டா, பிரையன் மசாபா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அல்பேஸ் ரம்ஜானி ஒரு விக்கெட் எடுத்தார்.