- Home
- Gallery
- டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஃபசல்ஹக் ஃபரூக்கி வரலாற்று சாதனை!
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஃபசல்ஹக் ஃபரூக்கி வரலாற்று சாதனை!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி சாதனை படைத்துள்ளார்.

Fazalhaq Farooqi
உகாண்டா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 5ஆவது போட்டி இன்று கயானாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற உகாண்டா பவுலிங் தேர்வு செய்யவே, ஆப்கானிஸ்தான் முதலில் விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது.
Afghanistan vs Uganda
பின்னர், கடின இலக்கை துரத்திய உகாண்டா அணியானது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ராபின்சன் ஒபுயா 14 ரன்கள் எடுத்தார்.
Afghanistan
ரியாத் அலி ஷா 11 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஃபசல்ஹக் பரூக்கி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அவர், 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார்.
Afghanistan vs Uganda
இதற்கு முன்னதாக இந்த தொடரில் 4 விக்கெட்டுகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா வீரர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகள் கைப்பற்றி 2ஆவது இடத்தில் உள்ளார். ஓமன் வீரர் மெஹ்ரன் கான் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி 3ஆவது இடத்தில் உள்ளார். இதே போன்று நமீபியா வீரர் டேவிட் வீஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி 5ஆவது இடத்தில் உள்ளார்.