- Home
- Gallery
- AFG vs PNG T20 2024: ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி – சூப்பர் 8 சுற்றுக்கு கம்பீர தோரணையோடு சென்ற ஆப்கானிஸ்தன்!
AFG vs PNG T20 2024: ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி – சூப்பர் 8 சுற்றுக்கு கம்பீர தோரணையோடு சென்ற ஆப்கானிஸ்தன்!
பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 29ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Afghanistan vs Papua New Guinea, T20 World Cup 2024
ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினி அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 29ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பப்புவா நியூ கினி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Afghanistan vs Papua New Guinea, T20 World Cup 2024
இதில் அதிகபட்சமாக கிப்லின் தோரிகா 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டும், நூர் அகமது ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Afghanistan vs Papua New Guinea, T20 World Cup 2024
பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், குர்பாஸ் 11 ரன்களில் ஆட்டமிழக்க, இப்ராஹிம் ஜத்ரன் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து குல்பதீன் நைப் மற்றும் அஸ்மதுல்லா உமர்சாய் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Afghanistan vs Papua New Guinea, T20 World Cup 2024
இதில், உமர்சாய் 13 ரன்களில் வெளியேறவே, முகமது நபி மற்றும் குல்பதீன் நைப் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். நைப் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நபி 16 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
Afghanistan vs Papua New Guinea, T20 World Cup 2024
இறுதியாக ஆப்கானிஸ்தான் 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும், குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Afghanistan vs Papua New Guinea, T20 World Cup 2024
பப்புவா நியூ கினிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலமாக நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. நியூசிலாந்து விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்த நிலையில் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. இதுவரையில் ஒரு முறை கூட நியூசிலாந்து டி20 உலகக் கோப்பையில் டிராபியை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Afghanistan vs Papua New Guinea, T20 World Cup 2024
இதே போன்று, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பப்புவா நியூ கினி தோல்வி அடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.