MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வரிசை கட்டி ஆட்டமிழந்த வீரர்கள்: 75 ரன்களுக்கு சரண்டரான நியூசிலாந்து – ஆப்கானிஸ்தானுக்கு 2ஆவது வெற்றி!

வரிசை கட்டி ஆட்டமிழந்த வீரர்கள்: 75 ரன்களுக்கு சரண்டரான நியூசிலாந்து – ஆப்கானிஸ்தானுக்கு 2ஆவது வெற்றி!

நியூசிலாந்திற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 12 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அதிகபட்சமாக 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2 Min read
Rsiva kumar
Published : Jun 08 2024, 09:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 12 ஆவது போட்டி கயானாவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது.

29
New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

இதில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 56 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்ராஹிம் ஜத்ரன் 44 ரன்களும், அஸ்மாதுல்லா உமர்சாய் 22 ரன்களும் எடுக்கவே ஆப்கானிஸ்தான் 159 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் மற்றும் மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். லாக்கி ஃபெர்குசன் ஒரு விக்கெட் எடுத்தார்.

39
New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

பின்னர் எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். டெவோன் கான்வே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 9, டேரில் மிட்செல் 5 ரன்கள் என்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் 18 ரன்கள் எடுக்க, மேட் ஹென்றி 14 ரன்கள் எடுத்தார்.

49
New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

மற்ற வீரர்கள் மார்க் சேப்மேன் 4, மைக்கேல் பிரேஸ்வெல் 0, மிட்செல் சாண்ட்னர் 4, லாக்கி ஃபெர்குசன் 2 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக நியூசிலாந்து 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்து 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

59
New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் ரஷீத் கான் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது நபி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலமாக 5 சர்வதேச போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக ஆப்கானிஸ்தான், நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

69
New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

இதன் மூலமாக டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் குறைவாக ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது.

79
New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

இதற்கு முன்னதாக டி20 உலகக் கோப்பையில் குறைவான ரன்கள் எடுத்த அணிகள்:

55 – இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், துபாய், 2021

60 – நியூசிலாந்து vs இலங்கை, சட்டோகிராம், 2014

70 – வங்கதேசம் vs நியூசிலாந்து, கொல்கத்தா, 2016

72 - வங்கதேசம் vs ஆஸ்திரேலியா, துபாய், 2021

75 – நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான், கயானா, 2024*

89
New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

ஒரு கேப்டனாக டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசியவர்கள்:

4/17 – ரஷீத் கான் vs நியூசிலாந்து, கயானா, 2024*

4/20 – டேனியல் வெட்டோரி vs இந்தியா, ஜோகன்னஸ்பர்க், 2007

4/20 – ஜீஷான் மக்சூத் vs பப்புவா நியூ கினி, ஓமன், 2021

99
New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

New Zealand vs Afghanistan, T20 World Cup 2024

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. நியூசிலாந்து அணி இனி விளையாடும் 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் வந்தால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஆப்கானிஸ்தான்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved