- Home
- Gallery
- கோடிகளில் சம்பளம்.. ஆடம்பர வாழ்க்கை.. சித்தார்த் - அதிதி ராவ் இருவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
கோடிகளில் சம்பளம்.. ஆடம்பர வாழ்க்கை.. சித்தார்த் - அதிதி ராவ் இருவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சித்தார்த் - அதிதி ராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2003ல் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் சித்தார்த். இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிரபுதேவா இயக்கிய நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டனா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்தார்.
தெலுங்குத் துறையில் இப்படத்தின் வெற்றி அவரை தெலுங்கு சினிமா துறையிலும் பிரபலமான முகமாக்கியது. இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, அமீர் கான் நடித்த ரங் தே பசந்தி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அவரை அணுகினார். இதன் மூலம் அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தனது திரை வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சித்தார்த், தற்போது தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை சித்தார்த் மேக்னா என்ற பெண்ணை 2003-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இருப்பினும் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர். இறுதியில், 2007-ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
siddharth and aditi rao
இதனிடையே மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டேட்டிங் செய்வதாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் வதந்திகள் பரவியது. இந்த ஜோடி சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதற்கான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.
இந்த நிலையில் சித்தார்த் - அதிதி ராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அதிதி. சமீபத்தில் வெளியான ஹீராமண்ட்டி வெப் சீரிஸில் அவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ரூ.1 கோடி வரை அதிதி ராவ் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
விளம்பரங்கள் மூலம் ரூ.50 லட்சம் வரை அவர் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிதி, அக்பர் ஹைதரி மற்றும் ராஜா ஜே ராமேஸ்வர ராவ் ஆகியோரின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ஹைதராபாத்தில் ஒரு அழகான மாளிகையும், மும்பை வெர்சோவாவில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பையும் அவர் வைத்திருக்கிறார். Audi Q7, Mercedes-Benz QLS, BMW X7 உள்ளிட்ட ஆடம்பர சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கிறார்.
siddharth
மறுபுறம் சித்தார்த்தின் நிகர மதிப்பு சுமார் ரூ. 70 கோடி என்று கூறப்படுகிறது. ஹைதராபாத், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வீடுகளையும் அவர் வைத்திருக்கிறார். சித்தார்த்திடம் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஏ4 கார்கள் உள்ளிட்ட ஆடம்பர வாகனங்கள் உள்ளன. சித்தார்த் ஒரு படத்திற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. எனவே அதிதி ராவ் ஹைதரி - சித்தார்த் இருவரின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
siddharth
இப்போது, சித்தார்த் மீண்டும் எஸ் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாரா மற்றும் மாதவனுடன் இணைந்து டெஸ்ட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்து வருகிறார். காந்தி டாக்ஸ் என்ற படத்திலும், Lioness என்ற ஆங்கில படத்திலும் அதிதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.