ஆதி குணசேகரனுக்கு எண்டே இல்ல.. ஜெயிலர் BGMல் என்ட்ரி கொடுத்த மாரிமுத்து - யாராவது அவர் கையை கவனிச்சிங்களா?
உண்மையில் ஆதி குணசேகரனாக வாழ்ந்த மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு, சிறிய சறுக்கலை சந்தித்துள்ளது அந்த நாடகம் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. திடீரென்று ஏற்பட்ட அவருடைய மரணம் அந்த சீரியலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Ethirneechal Marimuthu
அந்த வகையில் அவருடைய காட்சிகள் இல்லாமல், கடந்த சில நாட்களாக ஒரு சில எபிசோடுகள் வந்து செல்கின்றது. அப்படியே அவர் தோன்றும் காட்சிகள் வந்தாலும், அதில் ஆதி குணசேகரனின் அந்த கம்பீர குரல் இல்லாதது எதோ ஒரு வெறுமையை ஏற்படுத்துகின்றது என்று தான் கூறவேண்டும்.
Marimuthu
இந்நிலையில் நேற்று செப்டம்பர் 15ம் தேதி ஓளிபரப்பட்ட எபிசோடில், நந்தினி தன் முதல் வெற்றியை தனது சொந்தங்களோடு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார். வழக்கம் போல அவர்களுடைய சந்தோஷத்தில் நந்தினியின் கணவர் மற்றும் அவரது அண்ணன் குறுக்கிட அத்தோடு எபிசோடு முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Actor Marimuthu Photos
ஆனால் எபிசோடு அத்தோடு முடியாமல், அப்படியே கேமரா மாடியை நோக்கி செல்ல, ஜெயிலர் பட மாஸ் bgm இசைக்க ஆதி குணசேகரன் என்ட்ரி கொடுத்தார். உண்மையில் அவருடைய ரசிகர்களுக்கு அது மாபெரும் விருந்தாக இருந்தது என்று தான் கூறவேண்டும். உண்மையில் அது முன்பே எடுக்கப்பட்ட ஒரு காட்சி, காரணம் கடந்த பல மாதங்களாக கையில் சிவப்பு கயிறு கட்டாமல், தங்க காப்பு ஒன்று போட்டுகொண்டு தான் நடித்திருந்தார் மாரிமுத்து.
Ethirneechal Latest Episode
ஆனால் நாம் நன்றாக கவனித்தால், நேற்றைய எபிசோடு முடிவில் அவர் மடியில் தோன்றும் அந்த கட்சியில் அவர் கையில் தங்க காப்புக்கு பதிலாக சிவப்பு கயிறு கட்டப்பட்டிருந்தது. இன்னும் அவர் கதாபாத்திரத்தில் நடிக்க உரிய நடிகர் தேர்வு செய்யப்படாத நிலையில், அதுவரை அவருடைய பழைய காட்சிகளை பயன்படுத்தி எபிசோடுகள் எடுக்கப்படவுள்ளது. விரைவில் அவர் வெளியூர் செல்லும் காட்சிகள் இடம்பெறவுள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
நான் இதை செய்தது நிறைய பேருக்கு தெரியாது.. யாரும் நம்பமாட்டாங்க.. வனிதா விஜயகுமார் உடைத்த ரகசியம்