ஆபீஸில் வைத்து கதற,கதற என்னை சீரழித்தீங்களே.! மறந்துவிட்டீங்களா சீமான்-விஜயலட்சுமி பகீர் வீடியோ
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு நேர்ந்த அநீதியை விவரிக்கும் விஜயலட்சுமி, சீமான் தன்னை சீரழித்ததாகவும், பின்னர் அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
திரைப்படத்துறையில் பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாகியுள்ள நிலையில் அடுத்தடுத்து பிரபல நடிகர்களின் பெயர்கள் வெளியே வந்து கொண்டுள்ளது. இந்தநிலையில் பாலியல் புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் கூறுகையில் அனைத்து துறைகளிலும் பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சீமானின் இந்த பதிலுக்கு நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு பதில் கொடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவில் உதவி கேட்டு வந்த தன்னை சீமான் சீரழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விஜயலட்சுமி வீடியோவில் பேசுகையில், பாலியல் குற்றச்சாட்டை பற்றி சீமானிடம் மீடியா கேள்வி கேட்டாங்க, இதற்கு சீமான் ஒரு பதில் சொல்லியிருக்காரு, முகத்தை பச்சை குழந்தை போல் வைத்துக்கொண்டு, இந்த குழந்தையும் பால் குடிக்குமானு ஒரு நடிப்ப போட்டிருக்காரு, அந்த நடிப்ப பார்த்து மெய்சிலிர்த்து போய் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன்.
நீங்க விஜயலட்சுமி என்ற நடிகையோடு குடும்பம் நடத்தி அந்த பெண்ணோடு வாழ்க்கையை 14 வருடம் சீரழித்து தமிழகத்திற்குள் வாழமுடியாமல் கர்நாடகவிற்கு விரட்டி அடித்தீர்கள். அதுதான் உலகத்திற்கே தெரிந்த விஷயமாச்சே, 2008ஆம் ஆண்டு எனது அக்காவின் குழந்தையை தூக்கிட்டு போய்விட்டார்கள் என காப்பாற்ற கோரி உங்கள் அலுவலகத்தில் வந்து நின்றேனே அப்போ என்னை காப்பாத்தினீங்களா.? அதே ஆபிஸில் வைத்து கதற, கதற சீரழித்தீங்க, என் வாழ்க்கையை நாசமாக்கினீங்க அதை மறந்துவிட்டீங்களா?
6 முறை பினையில் மதுரையில் இருக்கும் போது கூட நான் தேவைப்பட்டேன். இந்த எல்லா கேடுகெட்ட வேலை எல்லாம் செய்து விட்டு போன வருடம் 50ஆயிரம் கொடுத்துறேன் திமுக காரர்களுக்கு முன்பு எதுவும் பேச வேண்டாம், கயல்விழிக்கு எதுவும் தெரியவேண்டாம் என டீல் பேசுனீங்க
அப்புறம்ப என்னையை டார்ச்சர் பன்னியதை தாங்க முடியாமல் போலீசில் புகார் கொடுத்தால் என்னையும் திமுகவையும் இணைத்து பேசுறீங்க, கொச்சை, கொச்சையாக மேடை முழுவதும் பேசியதை அதை மக்கள் மறந்து விட்டாங்களா. என் கூட சப்போர்ட்டுக்கு வந்த வீரலட்சுமி அவங்களை கொச்சை, கொச்சையாக பேசியதை மக்கள் மறந்து விடுவார்களா.?காளியம்மாள் பிசுறு என கூறியதை மக்கள் மறந்து விடுவார்களா.? நித்யானத்தா ஆசிரமத்தில் வெள்ளைக்கார பிகரா இருக்குன் சொன்னீங்களே அதை மறத்துடுவாங்களா.?
விஜயலட்சமி பாலியல் புகார் கொடுத்த பிறகு தான் பெண் பாலோவர்ஸ் அதிகமாகிவிட்டார்கள் என கூறினீங்களே மக்கள் மறந்துவிடுவாங்கனு நினைத்தீங்களா.? நீங்கள் உத்தமன் என நினைத்து மீடியா உங்களிடம் வந்து கேள்வி கேட்டார்கள் பாருங்கள் அவர்களைத்தான் சொல்லனும். நீங்கள் பெண்களை காப்பாற்ற போறீங்களா.? உங்களிடம் இருந்து தான் தமிழகத்தில் உள்ள பெண்களை காப்பாற்ற வேண்டும் என விஜயலட்சும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.