ஓ இத குடிச்சுதான் குடும்பமே யங்கா இருக்காங்களோ..? வனிதாவின் அக்கா.. டாக்டர் அனிதா சொன்ன ஸ்மூத்தி ரெசிபி!
பிரபல மூத்த தமிழ் நடிகர் விஜயகுமாரை பார்க்கும் அனைவரும் சொல்லும் முதல் விஷயம், "எப்படி சார் இவ்வளவு யங்கா" இருக்கீங்க என்பது தான். அந்த அளவிற்கு அவர் மட்டுமல்லலாமல், அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே நல்ல இளமையான தோற்றத்தோடு உள்ளனர்.
actor vijayakumar
அந்த வகையில் நடிகர் விஜயகுமார் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே நடிகர்கள் என்று இருக்கும் பொழுது, அனிதா விஜயகுமார் மட்டும் அதிலிருந்து விலகி, தற்பொழுது மருத்துவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் கலந்து கொண்ட இயக்குனர் - நடிகர் விக்னேஷ் கார்த்தியின் வெட்டிங் ரிசெப்ஷன் போட்டோஸ்!
Anitha Vijayakumar
விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துகண்ணுவிற்கு பிறந்த இரண்டாவது மகள் தான் அனிதா விஜயகுமார், இவர் கத்தார் நாட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார். அங்கு ஒரு மருத்துவராக அவர் பணிபுரிந்து வருகிறார்.
Arun Vijay
அண்மையில் 50 நாள் பயணமாக இந்தியா வந்த அனிதா விஜயகுமார், சென்னையில் புதிய வீடு ஒன்றை வாங்கினார். அது மட்டும் இல்லாமல் தனது தம்பி அருண் விஜய், தங்கைகள் ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி மற்றும் தந்தை விஜயகுமார் தாய் முத்துகண்ணு ஆகியோருடன் தனது நேரத்தை செலவிட்டு அண்மையில் நாடு திரும்பினார்.
Anitha Vijayakuamr Smoothie Recipe
இந்நிலையில் அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்மூத்தி ரெசிபியை பகிர்ந்துள்ளார். இதன் பெயர் கிரீன் ஸ்மூத்தியாம். இதை காலை நேரத்தில் அருந்துவதால் உங்கள் உடம்பு டீடாக்ஸ் ஆகிறது என்றும், உங்களுடைய எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்கிறது, மற்றும் உங்களுடைய சருமத்தை பாதுகாக்க இது பெரிய அளவில் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இதில் செலரி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, பார்ஸ்லே, பெர்ரி மற்றும் இஞ்சி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijay Antony : மகள் இறந்த 6 நாட்களில்... படப்பிடிப்பில் கலந்து கொண்டாரா விஜய் ஆண்டனி! என்ன காரணம்?