பிக் பாஸ் குடும்பம் ஒரு பக்கம்.. பவர் ஸ்டார் மறு பக்கம்.. நடுவில் வனிதா - எல்லாரும் ஒண்ணா கூடியது ஏன்?
கடந்த 1995 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக களமிறங்கிய நடிகை தான் வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.
Aranthangi Nisha
திரையுலகில் அறிமுகமாகி சுமார் 4 ஆண்டுகள் தமிழ், மலையாளம் மற்றும் தெலுகு ஆகிய மொழிகளில் இவர் 4 திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு முற்றிலுமாக தனது நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தார் வனிதா என்றே கூறலாம்.
Jawan: போட்ரா வெடிய... ஷாருக்கானை சாதனை கானாக மாற்றிய அட்லீ! 19 நாளில் 1000 கோடியை கடந்த ஜவான்!
Suresh Chakravarthy
இதற்கு இடையில் வனிதா விஜயகுமாரின் குடும்ப பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது, இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர், இன்றுவரை தனியாக தனது மகள்களுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Uma riyaz
இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "நான் ராஜாவாக போகிறேன்" என்ற திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் நடிக்க துவங்கினார். அதன்பிறகு மெல்ல மெல்ல ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் வனிதா விஜயகுமார் நடிப்பில் இந்த ஆண்டு இரு படங்கள் வெளியான நிலையில், இன்னொரு திரைப்படம் உருவாகி வருகின்றது.
Chakravarthy
இந்நிலையில் ஒரு தனியார் "செயலி வெளியிடும்" விழாவில் பங்கேற்க நடிகை வனிதா விஜயகுமார் சென்றிருந்த நிலையில், அங்கு அவருடன் நடித்த பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், மற்றும் அவரை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நிஷா, நடிகர் சென்ட்ராயன், நடிகை உமா ரியாஸ், மற்றும் சுரேஷ் சக்ரவர்த்து ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினார்.
புகை மூட்டத்தில் ஒரு வண்ண மயில் - குறைவான கிளாமரில்.. யாஷிகா வெளியிட்ட லைட் ஹாட் போட்டோஷூட்!