- Home
- Gallery
- Vani Bhojan: அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் வாணி போஜன்! விக்கி பார்த்தாலே கன்பியூஸ் ஆகிடுவாரு போலயே?
Vani Bhojan: அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் வாணி போஜன்! விக்கி பார்த்தாலே கன்பியூஸ் ஆகிடுவாரு போலயே?
நடிகை வாணி போஜன் அச்சு அசல் நயன்தாரா லுக்கிற்கு மாறி எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் என்ட்ரி ஆனவர் தான், நடிகை வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், 2012-ஆம் ஆண்டு ஆஹா, மாயா போன்ற தொடர்களில் நடித்திருந்தாலும், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தை பெற்று கொடுத்தது சன் டிவியில் இவர் நடித்த 'தெய்வமகள்' தொடர் தான்.
சுமார் 5 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'லட்சுமி வந்தாச்சு' தொடரிலும் நடித்தார். சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான வாணி போஜன், சீரியலில் நடிப்பதற்கு முன்பே சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்தன.
ஆனால் கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழில் இவர் இரண்டாவது நாயகியாக அறிமுகமான 'ஓ மை கடவுளே' திரைப்படம் ஹீரோயின் ரித்திகா சிங்கை விட, வாணி போஜனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின்னர் லாக் அப், மலேசியா டூ அமீனீஷியா, ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் அஞ்சாமை, போன்ற படங்களில் வரிசை கட்டி நடித்தார்.
தற்போது கேஸினா, பகைவனுக்கு அருள்வாய், ஆர்யன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில், விதவிதமாக போட்டோ ஷூட் செய்து, அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் வாணி போஜன்.
Amaran: Amaran : தீபாவளி ரேசில் இணைந்த சிவகார்த்திகேயன்! 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது நயன்தாரா லுக்கிற்கு மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. உண்மையில் வாணி போஜனின் இந்த போட்டோசை பார்த்தால்... இவங்க நயன்தாராவா என ஒரு நிமிஷம் கன்பியூஸ் ஆகிடுவார் போல விக்னேஷ் சிவன்.