- Home
- Gallery
- Urvashi Emotional: என் அக்கா கல்பனாவுக்கு மரியாதை கிடைக்கல.. யாருக்கும் தெரியாத விஷயம்.. கண்ணீருடன் ஊர்வசி!
Urvashi Emotional: என் அக்கா கல்பனாவுக்கு மரியாதை கிடைக்கல.. யாருக்கும் தெரியாத விஷயம்.. கண்ணீருடன் ஊர்வசி!
தமிழ் சினிமாவின் குணசித்திர நடிகைகளில் இன்றளவும் பிரபலமாக இருப்பவர் நடிகை ஊர்வசி. நேர்காணல் ஒன்றில் தனது சகோதரி கல்பனா குறித்து யாருக்கும் தெரியாத பல சம்பங்களை சோகத்துடன் பேசியுள்ளார் ஊர்வசி.

Urvashi Emotional Speech
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஊர்வசி, இன்னும் அனைத்து மொழிகளிலும் முக்கியமான கேரக்டர்களில் பிஸியாக இருக்கிறார். இவரது அக்காவான கல்பனா 25 ஜனவரி, 2016 அன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார். திறமையான நடிகையின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
Urvashi
பிரபல நாடக கலைஞர்களான சாவர வி.பி நாயர் மற்றும் விஜயலட்சுமி ஆகியோருக்கு கல்பனா பிறந்தார். இவரது முழுப்பெயர் பெயர் கல்பனா பிரியதர்ஷினி ஆகும். பிரபல நடிகைகள் கலா ரஞ்சினி மற்றும் ஊர்வசி இவரது சகோதரிகள் ஆவார்கள். நடிகை கல்பனா தனது 20 வயதில் கே. பாக்யராஜின் பிளாக்பஸ்டர் திரைப்படமான சின்ன வீடு படத்தில் நடிக்க தொடங்கினார்.
Cinema
சிறுவயதில் இருந்து நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானாலும், சின்ன வீடு திரைப்படம் தென்னிந்தியத் திரையுலகில் கல்பனாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. நேர்காணல் ஒன்றில் கல்பனாவின் சகோதரியும், நடிகையுமான ஊர்வசி, தனது அக்கா கல்பனாவை பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதில் என் அக்கா கல்பனாவுக்கு வந்த பல பட வாய்ப்புகளில் நான் தான் நடித்தேன்.
Kalpana
அவருக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்தியதை நினைத்து அவர் என் மீது கோபப்பட்டதே இல்லை. மாறாக என் வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்தார். என் மீது அவருக்கு அவ்வளவு பாசம். மலையாளம் மற்றும் தமிழ் சினிமா இரண்டுமே அக்காவுக்கு சரியான மரியாதையே அளிக்கவில்லை. அதனால் நான் ஆரம்பத்தில் இருந்தே பட விழாக்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன். அக்கா கல்பனா என்னைவிட திறமைசாலி. அவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்.
Urvashi About Kalpana
அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் தான் நான் அக்காவுடன் சென்றால், எனக்கு முக்கியத்துவம் தந்து விடுவார்கள் என்று நினைத்து பட விழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தேன்.ஆனால் அவரது மறைவுக்கு பிறகுதான் பல விருதுகளை வழங்கினார்கள். அதனை நான் வாங்க செல்லவில்லை” என்று அந்த நேர்காணலில் ஊர்வசி கண்ணீருடன் கூறியுள்ளார்.
ராஜமௌலி இல்லை.. ஷங்கர் இல்லை.. இந்தியாவின் பணக்கார திரைப்பட இயக்குனர் இவர்தான்.. யாரு தெரியுமா?