உண்மையாவே தேவதை தாங்க.. புடவையில் பிரமிக்க வைக்கும் த்ரிஷா.. வைரல் க்யூட் போட்டோஸ் ..
த்ரிஷா புடவையில் பிரமிக்க வைத்த க்யூட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trisha Krishnan
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலமும் அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் த்ரிஷா.
Actress Trisha
இதை தொடர்ந்து மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு என பல படங்களில் நடித்தார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, சிம்பு, கமல், விக்ரம் என அப்போது முன்னணியில் இருந்த ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா.
Actress Trisha
அபியும் நானும், விண்ணை தாண்டி வருவாயா, கொடி, 96, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் த்ரிஷாவின் நடிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
Actress Trisha
கடைசியாக லியோ படத்தில் நடித்த த்ரிஷா தற்போது அஜித்தின் விடா முயற்சி, மணிரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இவை தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
Actress Trisha
தனது நடிப்பால் மட்டுமின்றி தனது வசீகரமான ஆடைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக புடவைகள் மீதான தனது காதலை வெளிப்படுத்துவதில் அவர் ஒருபோதும் தயங்கியதே இல்லை. த்ரிஷா இதற்கு முன்பு புடவையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
Actress Trisha
அந்த வகையில் த்ரிஷா புடவையில் பிரமிக்க வைத்த க்யூட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. த்ரிஷாவின் இந்த போட்டோக்கள் தன்னை விட யாராலும் புடவைகளை ஸ்டைல் செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Actress Trisha
த்ரிஷா புடவையில் இருக்கும் இந்த போட்டோக்கள் இணையத்தில் மீண்டும் வைரலாகி வரும் நிலையில், புடவையில் அவர் ராணி போல் இருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.