- Home
- Gallery
- Trisha : ஆமா.. அது நடந்தது உண்மை தான்.. நயன்தாரா உடனான பிரச்சனை குறித்து த்ரிஷா ஓபன் டாக்..
Trisha : ஆமா.. அது நடந்தது உண்மை தான்.. நயன்தாரா உடனான பிரச்சனை குறித்து த்ரிஷா ஓபன் டாக்..
தனக்கும் நயன்தாராவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது த்ரிஷா ஓபனாக பேசி உள்ளார்.

trisha photo
1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்த த்ரிஷா கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான லேசா லேசா படத்தில் தான் முதலில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா கமிட்டானார். எனினும் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படம் முதலில் வெளியானதால் இந்த படமே த்ரிஷாவின் முதல் படமாக மாறியது.
Trisha
முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலமும் அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் த்ரிஷா. இதை தொடர்ந்து மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு என பல படங்களில் நடித்தார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, சிம்பு, கமல், விக்ரம் என அப்போது முன்னணியில் இருந்த ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா.
இதனிடையே தெலுங்கிலும் முன்னணி நடிகையாக மாறினார் த்ரிஷா. அபியும் நானும், விண்ணை தாண்டி வருவாயா, கொடி, 96, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் த்ரிஷாவின் நடிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படங்களில் குந்தவையாக மிரட்டி இருப்பார் த்ரிஷா.
கடைசியாக லியோ படத்தில் நடித்த த்ரிஷா தற்போது அஜித்தின் விடா முயற்சி, மணிரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இவை தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும், மறுபக்கம் ஹீரோயின் செண்ட்ரிக் படங்களிலும் த்ரிஷா நடித்து வருகிறார்.
தனது திரை வாழ்க்கையில் த்ரிஷா சறுக்கல்களை சந்தித்தாலும், அனைத்தையும் கடந்து தற்போது கோலிவுட் குயினாக வலம் வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர் தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் த்ரிஷா கொடுத்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய த்ரிஷா தனக்கும் நயன்தாராவுக்கு பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான் என்று அவர் கூறியுள்ளார்.
அது தொழில் காரணங்களால் வந்தது இல்லை, தனிப்பட்ட முறையில் வந்தது என்று கூறிய த்ரிஷா, காலம் செல்ல செல்ல நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். இப்போது நண்பர்களாகவே இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
Actress Trisha
முன்னதாக குருவி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தான் எனவும், அந்த வாய்ப்பை த்ரிஷா தட்டி பறித்ததாகவும் இருவருக்கும் இடையே பிரச்சனை உருவானதாக ஒரு தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
Trisha Krishnan
Trisha
அதேபோல மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்து பிரபல நடிகை திரிஷா அவர்களும் இது திரைப்படத்தில் ஒரு முக்கியதாக ரோலில் நடிக்க உள்ளார். விரைவில் சைபீரியாவில் நடக்க உள்ள இறுதி கட்ட படபிடிப்பு பணிகளில் திரிஷா பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.