- Home
- Gallery
- “அடுத்தவங்க என்ன வேணாலும் சொல்லுவாங்க.. ஆனா..” விஜய் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு த்ரிஷா கொடுத்த பதிலடி..
“அடுத்தவங்க என்ன வேணாலும் சொல்லுவாங்க.. ஆனா..” விஜய் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு த்ரிஷா கொடுத்த பதிலடி..
விஜய் ரிலேஷன்ஷிப் தொடர்பாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வரும் நிலையில் நடிகை த்ரிஷா இந்த வதந்திகளுக்கெல்லாம் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் கிசுகிசுக்களில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. வளர்ந்து வரும் நடிகர்கள் தொடங்கி பல உச்ச நடிகர்கள் நடிகைகள் வரை பலரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் கிசுகிசுக்களில் சிக்கி உள்ளனர். அந்த வகையில் விஜய்யும் - த்ரிஷாவும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கடந்த 2 வாரங்களாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. மேலும் விஜய் - த்ரிஷாவும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களையும் நெட்டிசன்கள் ஆதாரமாக அடுக்கி வருகின்றனர்.
கில்லி, ஆதி படங்கள் வெளியான போதே விஜய் – த்ரிஷா இடையே ரகசிய உறவு இருப்பதாக தகவல் பரவியது. அப்போதே விஜய்யும் – த்ரிஷாவும் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் நாளடைவில் மங்கிய நிலையில் தற்போது இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. த்ரிஷா பதிவிட்ட ஒரே ஒரு போட்டோ இதற்கு காரணம்.
vijay trisha
ஆம்.. ஜூன் 22-ம் தேதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் த்ரிஷா. விஜய் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவுடன் ஆங்கில பாடல் வரிகளையும் சேர்த்து பதிவிட்டிருந்தார். “ நீ தான் என் காதல்.. சாகும் வரை நீ தான் என் காதல்” என்ற வார்த்தைகள் அதில் இடம்பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலவிதமான கதைகள் உலா வரத் தொடங்கியது. த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த சிலர், விஜய்யும், த்ரிஷாவும் தனியாக எங்கோ சென்றிருப்பதாக கூறினர்.
இன்னும் சிலரோ, விஜய் சமீபத்தில் ஆரியபுரத்தில் ரூ.20 கோடி ஒரு அலுவலகத்தை வாங்கி உள்ளதாகவும், த்ரிஷாவும் அதே அப்பார்ட்மெண்ட்டில் ரூ.17 கோடிக்கு ஒரு வீட்டை வாங்கி உள்ளதாகவும் கூறினர். விஜய்யும் த்ரிஷாவும் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் லிஃப்டில் தான் அந்த போட்டோ எடுக்கப்பட்டதாகவும் கூறினர்.
இப்படி தினமும் ஒவ்வொரு கதையாக சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் த்ரிஷா கலந்து கொண்டதாக கூறி சில போட்டோக்கள் பரவியது. வாரிசு படத்தில் த்ரிஷா நடிக்காத போது அவர் ஏன் அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனிடையே பாடகி சுசித்ரா இதுகுறித்து பேசி இந்த சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தி இருந்தார். விஜய் த்ரிஷாவிடம் இருந்து விலகி, சங்கீதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் த்ரிஷா இந்த வதந்திகளுக்கெல்லாம் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோக்களை பகிர்ந்துள்ள த்ரிஷா, அதனுடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவரின் பதிவில் “ நீங்கள் எதையாவது அணிவதை நிறுத்த விரும்பினால், மற்றவர்களின் கருத்துகளின் எடையை உங்கள் மீது போட்டுக்கொள்ளாதீர்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் உடனான ரிலேஷன்ஷிப் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக த்ரிஷாவின் இந்த பதிவு பார்க்கப்படுகிறது.