- Home
- Gallery
- அறிமுகமே வில்லி.. வாரிசு நடிகருடன் காதல் தோல்வி! பாலிவுட் நடிகருடன் டேட்டிங் செய்யும் இந்த நடிகை யார் தெரியுமா
அறிமுகமே வில்லி.. வாரிசு நடிகருடன் காதல் தோல்வி! பாலிவுட் நடிகருடன் டேட்டிங் செய்யும் இந்த நடிகை யார் தெரியுமா
தமிழ் சினிமாவில் வில்லியாக என்ட்ரி கொடுத்து, பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படங்கள் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை தமன்னா பாட்டியா, தமிழ், தெலுங்குமற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகை ஆவார். மும்பையை சேர்ந்த இவர், Chand Sa Roshan Chehra என்கிற ஹிந்தி படத்தில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி இருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து 'ஸ்ரீ ' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானார்.
Tamannaah Bhatia
பின்னர் தமிழில் 'கேடி' என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக வில்லத்தனமான ரோலில் நடித்தார். ஆரம்பத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறினாலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் இவருக்கு கை கொடுத்தது.
Tamannaah Bhatia
கல்லூரி படத்தில் தமன்னாவின் நடிப்பு அதிகம் கவனிக்கப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக அயன், விஜய்க்கு ஜோடியாக சுறா, பரத்துக்கு ஜோடியாக கண்டேன் காதலை, தனுஷுக்கு ஜோடியாக படிக்காதவன், உள்ளிட்ட பட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
Tamannaah Bhatia
குறிப்பாக நடிகர் கார்த்தியுடன் பையா, சிறுத்தை, தோழா என மூன்று படங்களில் நடித்த போது... இருவரும் காதலித்து வந்ததாகவும், சூர்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இருவருமே ஒருமுறை கூட வெளிப்படையாக கூறியது இல்லை.
Tamannaah Bhatia
அதே போல் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக தமன்னா நடித்த, பாகுபலி தி பிகினிங் மற்றும் பாகுபலி 2 படங்கள் இவரை உலக அளவில் பிரபலமடைய செய்தது. பாலிவுட் பட வாய்ப்பு கிடைக்கவும் வழிவகுத்தது. கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் இவர், 35 வயதிலும் படு பிஸியான ஹீரோயினாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 தரமான வெற்றியை பதிவு செய்தது.
Tamannaah Bhatia
கடந்த ஆண்டு, லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிசில் தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிக்கும் தகவலை உறுதி செய்த, தமன்னா அவருடன் டேட்டிங்கிலேயே வாழ்க்கையை ஓட்டி வருகிறார். விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்வார்கள் என கூறப்படுகிறது.
tammannah
நடிகைகள் சினிமாவில், எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும்... இவர்களின் குழந்தை பருவ அரிய புகைப்படங்கள் வெளியாகும் போது அதனை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.