- Home
- Gallery
- Sunaina: காதல் நிலையை கடந்து விட்டேன்... என்கேஜ்மென்ட் ஆனதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த சுனைனா!
Sunaina: காதல் நிலையை கடந்து விட்டேன்... என்கேஜ்மென்ட் ஆனதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த சுனைனா!
நடிகை சுனைனா சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தனக்கு நிச்சயதாரம் ஆன தகவலை உறுதி செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Sunainaa
தமிழ் சினிமாவில், சில வாரிசு நடிகைகள் கூட... அறிமுகமான வேகத்தில், சரியான வாய்ப்பு கிடைக்காததால் சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் நிலையில், 15 வருடங்களுக்கு மேலாக தாக்கு பிடித்து நடித்து கொண்டிருப்பவர் சுனைனா.
Sunainaa
மாடலிங் துறையில் கால் பதித்து, மெல்ல மெல்ல சினிமா வாய்ப்புகளை தேட துவங்கிய இவர்... ஆரம்பத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்க துவங்கிய பின்னரே தமிழில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக 'காதலில் விழுந்தேன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
Sunainaa
இதை தொடர்ந்து மீண்டும் நகுலுக்கு ஜோடியாக மாசிலாமணி, பரத்துக்கு ஜோடியாக திருத்தணி, அருள்நிதிக்கு ஜோடியாக வம்சம், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நீர்ப்பறவை, தளபதி விஜய் நடித்த தெறி, போன்ற பல படங்களில் நடித்தார்.
Sunainaa
ரெஜினா எங்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்த இவருக்கு அப்படம் வெற்றியை பெற்று தராத நிலையில், இவரின் கைவசம் ஒரு படம் கூட இல்லை என கூறப்படுகிறது. வயதும் 35 வயதை தொட்டு விட்டதால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்துவிட்டார்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் ஒருவரின் கையை பிடித்திருப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளது தெரியவந்தது.
sunaina
இதை தொடர்ந்து, சுனைனா தனது சமூக வலைதளத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் தனக்கு நடந்து முடிந்ததை உறுதி செய்துள்ளார். மேலும் ’கடந்த சில நாட்களாக என்னுடைய சமீபத்திய போஸ்ட் பற்றிய சில செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதை பார்க்கிறேன். அதை உறுதி செய்யும் விதமாக எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வருங்கால கணவரின் முகத்தை மட்டும் சுனைனா இதுவரை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.