MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பப்புக்கு போய் பட வாய்ப்பு... நின்று போன திருமணம்! தன்னை விட இளைய வயது நடிகரை திருமணம் செய்த நடிகையா இது ?

பப்புக்கு போய் பட வாய்ப்பு... நின்று போன திருமணம்! தன்னை விட இளைய வயது நடிகரை திருமணம் செய்த நடிகையா இது ?

பல சர்ச்சைகளுக்கு ஆளான போதிலும், தமிழில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்த நடிகை சினேகாவின் குழந்தை பருவ அரிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jun 01 2024, 08:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Sneha Childhood Photos

Sneha Childhood Photos

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், நடிகை சினேகா பிறந்திருந்தாலும்... இவர் வளர்ந்தது , படித்தது எல்லாம் துபாயில் தான். தொழில் ரீதியாக இவரது குடும்பம் துபாயில் வசித்த போதிலும், பின்னர் சொந்த ஊரான தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டியில் குடியேறினர். அங்கே சினேகா தந்தைக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Sneha Childhood Photos

Sneha Childhood Photos

படிக்கும் போதில் இருந்தே, மாடலிங் துறையில் கவனம் செலுத்திய சினேகா, பின்னர் பட வாய்ப்புகளை தேட துவங்கினார். அதன்படி கடந்த 2000-ஆம் ஆண்டு சினேகாவுக்கு முதல் முதலில் மலையாளத்தில் 'இங்கனே ஒரு நீல பக்சி' என்ற படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அதே ஆண்டு நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 'என்னவளே' படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்தார் சினேகா.

Nayanthara: ரோட்டில் உட்கார்ந்து அட்டகாசம் செய்த மகன்! காதல் முதல் சேட்டை வரை... நயன்தாரா பகிர்ந்த போட்டோஸ்!

39
Sneha Childhood Photos

Sneha Childhood Photos

இதை தொடர்ந்து மம்மூட்டி ஹீரோவாக ஆனந்தம் படத்தில், அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில்  இடம்பெற்ற 'பல்லாங் குழியில் வட்டம் பார்த்தேன்...' பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் பல மாணவர்கள்... இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடும் பாடலாகவும் மாறியது. 

49
Sneha Childhood Photos

Sneha Childhood Photos

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் படு பிஸியான கதாநாயகியாக மாறிய சினேகா, புன்னகை அரசி என்கிற பட்டத்திற்கும் சொந்தக்காரியாக மாறினார். புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன், வசூல் ராஜா MBBS, ஏப்ரல் மாதத்தில், ஆட்டோகிராப், பார்த்திபன் கனவு, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்கள் தற்போது வரை பல ரசிகர்களின் ஃபேவரட் படங்களில் ஒன்றாக உள்ளது. 

ஓ இதான் மேட்டரா.? ஒருவழியாக புகைப்படத்தோடு குட் நியூஸை ஓப்பன் செய்த ஆல்யா மனசா.. குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

59
Sneha Childhood Photos

Sneha Childhood Photos

நடிகை சினேகா, முன்னணி நடிகையாக இருக்கும் போது... நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது. இதை தொடர்ந்து சினேகாவை வைத்து விளம்பர படம் எடுத்து, பிரபல நிறுவனத்தின் உரிமையாளரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பின்னர்... திருமணம் நடக்காமல் போனது.

69

தனக்குள் பல கஷ்டங்கள் இருந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த போது தான், நடிகர் பிரசன்னாவுடன் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடித்த போது பிரசன்னாவை காதலிக்க துவங்கினார். இவர்களின் காதலை இருவீட்டு தரப்பும் ஏற்றுக்கொண்ட நிலையில், திருமணமும் முடிந்தது. சினேகாவை விட பிரசன்னா ஒரு வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 

Garudan Day 1 Collection: முதல் நாளே கோடியில் வசூலை அள்ளிய சூரியின் கருடன்! முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!

79
Actress Sneha Prasanna

Actress Sneha Prasanna

ரொமான்டிக் காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு விஹான் என்கிற மகனும், ஆத்யந்தா என்கிற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சினேகா, சமீபத்தில் பட்டு சேலைகளுக்கு என்று சினேகாலயா என்கிற துணிக்கடை ஒன்றையும் துவங்கினார். 
 

89

இந்த விற்கப்படும் புடவைகள் ஒவ்வொன்றையும்... அவரே டிசைன் செய்வது மட்டும் இன்றி... அவரே தேர்வு செய்து வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குழந்தை பருவ புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

கொப்பன் மவனே வாடா..! அன்று சிம்புவுடன் சென்ற இடத்துக்கு... 12 வருடம் கழித்து நயன்தாராவை கூட்டி சென்ற விக்கி!

99

சினேகா ஆரம்ப கால பட வாய்ப்புகள் பெற்றது குறித்து, வீடியோ ஒன்றில் பேசி இருந்த பயில்வான் ரங்கநாதன்... பிரபலங்கள் கலந்து கொள்ளும், பார்ட்டி, பப், போன்ற இடங்களுக்கு சென்று தான் சினேகா வாய்ப்புகளை கைப்பற்றியதாக விமர்சித்து பேசினார். ஆனால் அது எந்த அளவுக்கு நம்பகமான தகவல் என்பது தெரியவில்லை.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved