- Home
- Gallery
- வசீகரம் மாறாத புன்னகை.. 42 வயதிலும் எப்படி இவ்வளவு அழகா இருக்காங்க.. சினேகாவின் க்யூட் போட்டோஸ்..
வசீகரம் மாறாத புன்னகை.. 42 வயதிலும் எப்படி இவ்வளவு அழகா இருக்காங்க.. சினேகாவின் க்யூட் போட்டோஸ்..
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சினேகாவின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Sneha
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சினேகா. 2000களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக இருந்தவர். சுசி கணேசன் இயக்குனராக அறிமுகமான விரும்புகிறேன் படத்தில் நடிக்க சினேகா அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெளியாக தாமதமானதால், அவர் மாதவனுக்கு ஜோடியாக நடித்த என்னவளே படம் சினேகாவின் முதல் தமிழ் படமாக மாறியது.
Sneha Pics
தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார் சினேகா. இதனால் கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், ஸ்ரீ காந்த், தனுஷ் என அப்போது உச்சத்தில் இருந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் சினேகா.
Sneha Pics
2009-ம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு என்ற த்ரில்லர் படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும் இருவருக்கும் காதல் ஏற்பட பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த க்யூட் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.
Sneha Latest pics
தொடர்ந்து படங்களில் துணை கதாப்பாத்திரங்கள், கேமியோ ரோலில் நடித்து வருகிறார் சினேகா. அந்த வகையில் தற்போது விஜய்யின் அடுத்த GOAT படத்திலும் நடித்து வருகிறார்.
Sneha Latest pics
வெள்ளித்திரையில் கலக்கிய சினேகா தற்போது சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலக்கி வருகிறார். மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
Sneha Latest pics
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சினேகாவின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sneha Latest pics
எப்போதும் போல புடவையில் ட்ரெடிஷனல் லுக்கில் கியூட்டாக இருக்கிறார் சினேகா. அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.