- Home
- Gallery
- சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு! சிம்பிள் பட்டு பட்டு சேலையில் செப்பு சிலைபோல் ஜொலிக்கும் சினேகா!
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு! சிம்பிள் பட்டு பட்டு சேலையில் செப்பு சிலைபோல் ஜொலிக்கும் சினேகா!
நடிகை சினேகா, தன்னுடைய சினேகாலையா சில்க்ஸ் புடவையில்... பேரழகியாய் ஜொலிக்கும் போட்டோ ஷூட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவிற்கு, அழகும் - திறமையும் ஒரேசேர கிடைத்த நடிகை தான் பிரபல நடிகை சினேகா. இவர் அறிமுகமானது மலையாள திரைப்படம் என்றாலும், இவரை பிரபலமடைய செய்தது தமிழ் படங்கள் தான்.
2000-ஆம் ஆண்டு நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சினேகா நடித்த 'என்னவளே' திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த படத்தை தொடர்ந்து, மாமூட்டி ஹீரோவாக நடித்த 'ஆனந்தம்' படத்தில் அபாஸுக்கு ஜோடியாக சினேகா நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் படத்தில் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் அவ்வளவாக கண்டு கொள்ளப்படாத நடிகைகள் லிஸ்டில் இருந்த சினேகாவை, முன்னணி ஹீரோயின் லிஸ்டில் இணைய வைத்தது 'உன்னை நினைத்து' திரைப்படம் தான். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார்.
அதே போல் இயக்குனர் சுசி கனெக்ஷன் இயக்கத்தில், பிரஷாந்துக்கு ஜோடியாக சினேகா நடித்த விரும்புகிறேன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்டேட் விருது சினேகாவுக்கு கிடைத்து.
சினேகாவின் சினிமா கேரியரும் மெல்ல மெல்ல சூடு பிடிக்க துவங்கிய நிலையில்... கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, வசூல் ராஜா MBBS, ஜனா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம் போன்ற பல படங்களில் நடித்தார்.
தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சினேகா, பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், நிச்சயதார்த்தம் வரை சென்று இவர்களின் திருமணம் நடைபெறாமல் போனது.
பின்னர் தன்னுடைய சோகத்தை வெளியே காட்டி கொள்ளாமல் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிய சினேகா, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிக்கும் போது நடிகர் பிரசன்னாவை காதலிக்க துவங்கினார்.
குடிப்பழக்கம் இல்லாத மற்றும் குடியில் இருந்து மீண்ட 6 முன்னணி பிரபலங்கள்! யார் யார் தெரியுமா!
2010-ஆம் ஆண்டு காதலிக்க துவங்கிய இந்த ஜோடி 2012-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், ஏராளமான கோலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தற்போது சினேகாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்னரும், தன்னுடைய அழகி, மிடுக்காக மெயின்டெயின் செய்து வரும் சினேகா சினிமாவிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
'சர்தார் 2' படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி!
சமீபத்தில் நடிகை என்பதை தாண்டி, பட்டு சேலைகளுக்கு என சினேஹாலயா என்கிற கடை ஒன்றையும் திறந்த இவர், தன்னுடைய கடையின் சேலையை உடுத்தியபடி... அழகு தேவதை போல் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது. இவரின் போட்டோசை பார்க்கும் போது... சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.