17 வயசு.. உடல் அமைப்பால் கேவலப்படுத்தப்பட்ட விஜய் பட நடிகை - ஆனா இன்று அவர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Famous Actress : இன்று திரைத்துறையில் பெரிய உயரங்களை தொட்டிருந்தாலும், ஒரு காலத்தில் பல அவமானங்களை கண்ட கலைஞர்கள் பலர் உண்டு.
shilpa
அப்படி துவக்க காலத்தில் பெறிய அளவில் உருவ கேலிகளையும், அவமானங்களையும் சந்தித்த நடிகை தான் ஷில்பா ஷெட்டி. பெரிய அளவில் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தனது 49வது வயதில் பயணித்து வரும் நடிகை ஷில்பா செட்டி, தனது 17வது வயது முதல் நடித்து வருகிறார். அண்மையில் தனது திரை வாழ்க்கை குறித்து பேசிய ஷில்பா செட்டி, வெகு சில நடிகைகள் மட்டுமே சந்திக்கும் அவமானங்களை சந்தித்து தான், நான் திரைத்துறையில் கால் பதித்தேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் மண்டை உடைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!
actress shilpa
"அப்போது எனக்கு வயது வெறும் 17, சினிமாவில் நடிக்கும் நேரத்தை தவிர எனது தந்தையின் தொழிலில் நான் அவருக்கு உதவியாய் இருப்பேன். ஆனால் நான் உயரம் சற்று அதிகமாகவும், கருத்த மேனியுடன், ஒல்லியாகவும் இருந்ததனால் என்னை கண்டபடி எல்லாம் பேசினார்கள். தயாரிப்பாளர்கள் என்னை திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டு, அடுத்த சில நாட்களில் என்னைப் படத்தில் இருந்து வெளியேற்றினார்கள்".
shilpa shetty
"ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் சினிமா தான், ஆகையால் அதை விட்டு வெளியேற என் மனம் விரும்பவில்லை. தொடர்ச்சியாக அவமானங்களை சந்தித்தேன், ஒரு கட்டத்தில் அது எனக்கு பழகிப் போய்விட்டது. ஆனால் இன்று சினிமாவில் நானும் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு மிகப்பெரிய மனநிறைவைத் தருகிறது" என்று அவர் பேசி இருக்கிறார்.
actress shilpa shetty
கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் ஷில்பா செட்டி, திரைப்படம் மற்றும் விளம்பர படங்களுக்கு சுமார் இரண்டு முதல் ஏழு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். ஒரு பிரைவேட் ஜெட்டை தன்வசம் வைத்துள்ள அவருடைய சொத்து மதிப்பு சுமார் 220 கோடியாகும்.
ரீல் லைப் மட்டும் இல்ல; ரியல் லைப்லயும் விவசாயம்னா ரொம்ப பிடிக்கும் - நடவு பணியில் சசிகுமார்