- Home
- Gallery
- 4 வயதில் குழந்தை நட்சத்திரம்; 17 வயதில் ஹீரோயின்! பல பிரச்சனைகளை கடந்து ஸ்காட்லாந்தில் படிப்பை முடித்த சனுஷா!
4 வயதில் குழந்தை நட்சத்திரம்; 17 வயதில் ஹீரோயின்! பல பிரச்சனைகளை கடந்து ஸ்காட்லாந்தில் படிப்பை முடித்த சனுஷா!
தன்னுடைய 4 வயதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மாறிய நடிகை சனுஷா சந்தோஷ், ஸ்காட்லாந்தில் தன்னுடைய மேல் படிப்பை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை சனுஷா சந்தோஷ். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நான்கு வயதில் மலையாள படத்தில், கடந்த 1998 ஆம் ஆண்டு அறிமுகமான சனுஷா, பின்னர் அடுத்தடுத்து பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
குறிப்பாக 2001 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான 'காசி' படத்தில் ஹீரோயின் காவேரியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் 'சுந்தரா ட்ராவல்ஸ்' திரைப்படத்திலும் சிறிய வயது ஹீரோயினாக இவர் நடித்திருந்தார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் விருதை இரண்டு முறை பெற்றுள்ள சனுஷா, பின்னர் தமிழில் 2008 ஆம் ஆண்டு 'பீமா' படத்தில் த்ரிஷாவின் தங்கையாகவும், 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார்.
அப்போது தனக்கு திறமை இருந்தும், ஹீரோயின் வாய்ப்பு கொடுக்க பலர் தயங்குவதாக சனுஷா கூறி வந்த நிலையில்... அதிரடியாக நடிகர் விமல் ஹீரோவாக நடித்த 'எத்தன்' படத்தில், 17 வயதிலேயே கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த சனுஷா கடைசியாக 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஜெஸ்ஸி என்கிற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். பின்னர் ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட சனுஷா அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்ததால், விட்டு போன தன்னுடைய படிப்பை தொடர முடிவு செய்து ஸ்காட்லாந்து சென்று, தன்னுடைய மேல் படிப்பை தொடர்ந்தார்.
கடந்தாண்டு தன்னுடைய படிப்பை முடித்த சனுஷா, தற்போது மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில்... படிப்பை முடித்துவிட்டு பட்டம் பெற்ற புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். இதில் பல கனவு மற்றும் ஆசைகளுடன் வெகு தொலைவில் இருந்து நம்பிக்கையோடு மட்டுமே இங்கு வந்து, இரண்டு வருட போராட்டங்களுக்கு நடுவே இந்த பட்டத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய வீட்டை விட்டு வெகுதூரம் வந்ததால், குடும்பத்தினரை பிரிந்து அழுகை, தூக்கமில்லாத இரவுகள், பகுதி நேர மற்றும் முழு நேர வேலைகள், கடின உழைப்பு, உடல்நல பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் உணர்வு ரீதியான பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும் அவை அனைத்தையும் கடந்து தன்னை வழி நடத்திய கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார்.
சாப்பாட்டுக்கே கஷ்டம்; உருவ கேலிக்கு ஆளான யோகி பாபுவின் இன்றைய சொத்துமதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
அதேபோல் எந்நேரமும் தனக்கு முழு பக்க பலமாக இருந்த, தன்னுடைய குடும்பத்தினருக்கு கோடான கோடி நன்றிகள் என்றும், நீங்கள் தன்னுடைய படிப்பு மற்றும் தொழில் ரீதியாகவும் அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருந்துள்ளீர்கள் எனக் கூறி தன்னுடைய வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சனுஷா ஸ்காட்லாண்டில் தற்போது MSc-ல் Graduate on Global Mental Health & society, என்கிற பிரிவை தேர்வு செய்து பட்டம் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சனுஷாவுக்கு பல ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.