சித்தி கொடுமை.. விட்டு சென்ற தாய், தந்தை.. அண்ணன் மரணம்.. நடிகை சாண்ட்ராவின் மறுபக்கம்!
சின்னத்திரை பிரபலமான நடிகை சாண்ட்ரா தன்னுடைய கணவர், குழந்தைகள் மற்றும் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து கண்ணீருடன் பேசியுள்ளார்.

Sandra Amy Prajin
பிரபல தொலைக்காட்சி ஜோடிகளான பிரஜின் மற்றும் சாண்ட்ரா பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் தோன்றி தமிழ் பார்வையாளர்களிடையே பெரும் ரசிகர்களைப் பெற்றுள்ளனர்.
Actress Sandra
நடிகை சாண்ட்ரா தனது குடும்பத்தை பற்றி மனம் திறந்து ஒரு பேட்டியில் கண்கலங்க பேசியுள்ளார். அதில் பேசிய சாண்ட்ரா, “என் பெற்றோர் பிரிந்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நானும், என் சகோதரனும், என் தந்தையுடன் இருந்தோம். என் தந்தை வேறு திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
Actress Sandra Husband
அண்ணனிடம் இதைப்பற்றி சொன்னதும் சரி என்றார். இன்னைக்கு ஓகே சொல்லலைன்னா என் வாழ்க்கையே பாழாப் போனதுக்கு நீ தான் காரணம் என்று சொல்லுவார் என நினைத்தோம். பிறகு என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
Actor Prajin
என் தந்தை 2ம் திருமணம் செய்தது எங்களது வாழ்வில் கசப்பான தருணத்துக்கு அடிப்படையாக இருந்தது. வந்த புது சித்தியால் எங்களுக்கு நிறைய பிரச்னைகள் வந்தன” என்று கூறியுள்ளார். மேலும் நடிகை சாண்ட்ராவின் சகோதரர் 2006 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்தார்.
Sandra About Family
அண்ணன் இறந்த பிறகு தன் அண்ணனின் காதலி தற்கொலை செய்து கொண்டார். எனக்கு அவர்கள் காதலிப்பது தெரியாது. அண்ணன் இறந்த மறுநாள் காலை அவரும் இறந்தார். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னுடன் என் அண்ணன் இல்லாதது இன்னும் கடினமாக உள்ளது.
Actress Sandra Life
என் மகளுக்கு அண்ணனின் பெயர் வைத்துள்ளோம். இந்த நாட்டிற்கு வந்து எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கிறது. எனக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது என்று தனது குடும்பம் மற்றும் தனது கணவர் பிரஜன் குறித்து யாருக்கும் தெரியாத பல விஷயங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார் சாண்ட்ரா.
ராஜமௌலி இல்லை.. ஷங்கர் இல்லை.. இந்தியாவின் பணக்கார திரைப்பட இயக்குனர் இவர்தான்.. யாரு தெரியுமா?