- Home
- Gallery
- இதனால தான் சமந்தா இவ்ளோ யங்காவும், ஃபிட்டாவும் இருக்காங்களா? அவங்களோட டயட் சீக்ரெட் இதோ..
இதனால தான் சமந்தா இவ்ளோ யங்காவும், ஃபிட்டாவும் இருக்காங்களா? அவங்களோட டயட் சீக்ரெட் இதோ..
சமந்தாவின் டயட் மற்றும் மற்றும் ஃபிட்னஸ் வழக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகைகள் பலரும் தங்கள் உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்கவும், வசீகர தோற்றத்திற்கும் பல உடற்பயிற்சி, டயட் முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது நடிப்பால் மட்டுமின்றி, ஃபிட்டான உடலமைப்பு, பளபளப்பான முகம் ஆகியவற்றாலும் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தவர் சமந்தா.
உடல் ஆரோக்கியத்தில் உணவு மற்றும் உடற்பயிற்சி முறை தீவிரமாக பின்பற்றும் பழக்கம் கொண்டவர் சமந்தா. இது அவரின் உடல் நலனை பாதுகாப்பதுடன் அவரின் அழகிய சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது. சரி.. சமந்தாவின் டயட் மற்றும் மற்றும் ஃபிட்னஸ் வழக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தினசரி உடற்பயிற்சி, குறிப்பாக கார்டியோ பயிற்சிகள் மற்றும் வலிமை பயிற்சி ஆகியவற்றின் சீரான கலவையை சமந்தா தினமும் பின்பற்றி வருகிறார். இது அவர்ன் உடலை பராமரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், அவரது சருமத்தின் இயற்கையான பளபளப்பிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்ககமான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், இது ஆரோக்கியமான மற்றும் துடிப்பான சருமத்தை ஊக்குவிக்கிறது.
விருப்பப்படி அசைவம் சாப்பிடும் சமந்தா, பழங்கள், நட்ஸ் மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய சத்தான காலை உணவோடு தனது நாளைத் தொடங்குகிறார். இது அவருக்கு அத்தியாவசிய வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை வழங்குகிறது.
மேலும் அவர் தனது காலை வழக்கத்தில் உலர் பழங்களைச் சேர்த்துக் கொள்வாராம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அவரின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மதிய உணவிற்கு, சமந்தா பாரம்பரிய மற்றும் சத்தான உணவைத் தேர்வு செய்கிறார். வழக்கமாக பிரவுன் ரைஸ் மற்றும் குறைவான எண்ணெயில் சமைக்கப்பட்ட காய்கறிகளை சாப்பிடுவாராம். சமந்தாவின் மதிய உணவில் பெரும்பாலும் சாம்பார் மற்றும் பருப்பு ஆகியவை அடங்கும், அவை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்களாகும்.
சிறிய அளவில் தனது உணவை உட்கொள்வதன் மூலம், அதிக உணவை உண்ணாமல் அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்துக்களைப் பெறும் வகையில் அவர் உணவு முறையை பின்பற்றி வருகிறார். இது நல்ல செரிமானத்தையும், அதன் விளைவாக, தெளிவான சருமத்தையும் பராமரிக்க முக்கியமானது.
மாலையில், சமந்தா லேசான மற்றும் ஆரோக்கியமான தின்பண்டங்களை விரும்புகிறார். சர்க்கரை, கிரீன் டீ மற்றும் கொஞ்சம் பழங்களை அவர் சாப்பிடுகிறார். கிரீன் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்றம் சருமத்திற்கு நன்மை பயக்கும், இது வீக்கத்தைக் குறைப்பதற்கும் தெளிவான நிறத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. சமந்தா ஒரு நாளைக்கு மூன்று முறை க்ரீன் டீயை உட்கொள்வதாக கூறப்படுகிறது.
சமந்தாவின் இரவு உணவு எளிமையானது ஆனால் சத்தானது, வேகவைத்த காய்கறி சூப்பை மட்டுமே அவர் சாப்பிடுகிறாராம்.. இந்த லேசான உணவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது செரிமானத்திற்கு உதவுவதோடு, பளபளப்பான சருமத்திற்கும் உதவுகிறது. இந்தச் சமச்சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம், சமந்தா தனது பளபளப்பான சருமத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரித்து வருகிறார்.