புது படம் கமிட்டான குஷியில் சாக்ஷி அகர்வால்.. சூப்பர் ஹாட் ரெட் சாரியால் கிறங்கிப்போன ரசிகர்கள் - ஹாட் பிக்ஸ்!
பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சாரா என்ற படத்தில் நடித்து வருகின்றார், இசைஞானி இளையராஜா தலைமையில் அண்மையில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய் விஷ்வா என்பவர் இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார்.
Sakshi Saara Movie
தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து, அதன் மூலம் புகழ் பெற்றவர் தான் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலா திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sakshi Agarwal
கடைசியாக தமிழில், அண்மையில் வெளியான பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படமான பிரபு தேவாவின் பகிரா என்ற படத்தில் நடித்த சாக்ஷி அகர்வால், தற்போது சுமார் 6 திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Sakshi Agarwal
120 ஹவர்ஸ் என்ற ஆங்கில திரைப்படம் ஒன்றிலும் சாக்ஷி அகர்வால் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் எழில் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்திலும் சாக்ஷி நடித்திருந்தார், ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Sakshi Agarwal
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சாரா என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சாக்ஷி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றது.
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய... 'அயலான்' படத்தின் ரிலீஸ் குறித்து அறிவித்த படக்குழு!!