துளி கூட கிளாமர் இல்ல.. டாப் ஹீரோயினாக வலம் வந்த ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
ரேவதி என்றாலே மனதில் தோன்றும் அவரின் சிறந்த கேரக்டர்கள் மற்றும் அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Revathi
80 மற்றும் 90களில் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. ஹீரோயின், இயக்குனர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்ட நடிகைகளில் ரேவதியும் ஒருவர். ஹீரோக்களுடன் காதல், டூயட் என வழக்கமான ஹீரோயின்களை போல் அல்லாமல் வலுவான பெண் கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சினிமாவில் நீடிக்க எந்தளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டலாம் என்று நடித்த பல நடிகைகளுக்கு மத்தியில் துளி கூட கவர்ச்சி இல்லாமல் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார் ரேவதி.
Revathi
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், முரளி என அப்போது முண்ணி நடிகர்களாக இருந்த பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். பின்னர் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது காமெடி கதாப்பாத்திரங்களிலும் ரேவதி கலக்கி வருகிறார். ரேவதி என்றாலே மனதில் தோன்றும் அவரின் சிறந்த கேரக்டர்கள் மற்றும் அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Mann vasanai
மண் வாசனை :
பாரதிராஜாவின் மண் வாசனை படத்தில் தான் ரேவதி கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ரேவதி, சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். இந்த படம் 200 நாட்களுக்கும் மேல் ஓடியது. இந்த படத்தில் முத்து பேச்சி என்ற கிராமத்து பெண் கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ரேவதி.
Mouna Ragam Movie
மௌன ராகம் :
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படம் கல்ட் கிளாசிக் படமாக உள்ளது. இந்த படத்தில் திவ்யா என்ற கேரக்டரில் ரேவதி நடித்திருப்பார். கார்த்திக்கை காதலிக்கும் போது சரி, மோகனை வெறுக்கும் போதும் சரி அல்லது மீண்டும் மோகனை மெல்ல காதலிக்கும் போது தனது இயல்பான நடிப்பின் மூலம் திவ்யாவாகவே வாழ்ந்திருப்பார் ரேவதி.
Pudhumai Penn
புதுமை பெண் :
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுமை பெண் படத்தில் சீதா என்ற கேரக்டரில் ரேவதி நடித்திருப்பார். கணவனுக்காக எதையும் செய்யும் மனைவியாகவும் ஒருகட்டத்தில் தனது அன்புக்கு கணவனிடத்தில் மரியாதை இல்லை என்று தெரிந்த உடன் சிங்கப்பெண்ணாகவும் மாறுவார் சீதா. இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரேவதி பேசும் வசனமும், இந்த படத்தில் ஒரு தென்றல் புயலாகி வருதே பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
Vaidehi Kathirundhal Revathi
வைதேகி காத்திருந்தாள் :
விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வைதேகி என்ற கேரக்டரில் ரேவதி நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கணவனை இழந்த இளம் விதவையாக நடித்த ரேவதி அழகு மலராட பாடத்தின் தனது பரதநாட்டியம் மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.
Kizhaku Vasal movie
கிழக்கு வாசல் :
கார்த்திக், ரேவதி நடிப்பில் வெளியான கிழக்கு வாசல் படம் மிகப்பெரிய வெற்றி படமாகும். இந்த படத்தில் தாயம்மா என்ற கேரக்டரில் நடித்த ரேவதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது ரேவதிக்கு கிடைத்தது.
Revathi
இந்த படங்கள் தவிர பல ஹிட் படங்களில் ரேவதி நடித்திருக்கிறார். ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் சில படங்களை இயக்கி உள்ளார். நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி என்று கூறப்படுகிறது. கேரளாவில் ரூ.4 கோடி மதிப்பிலான வீடும், சென்னையில் ரூ.5 கோடி மதிப்பிலான வீடும் இருக்கிறதாம். இவைத்தவிர பல சொகுசு கார்களும் ரேவதியிடம் உள்ளது.