- Home
- Gallery
- ரஞ்சிதமே பாடலுக்கு அதே துள்ளலுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய ராஷ்மிகா.. வீடியோவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்..
ரஞ்சிதமே பாடலுக்கு அதே துள்ளலுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய ராஷ்மிகா.. வீடியோவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்..
கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

Rashmika Mandanna
தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். புஷ்பா, கீதா கோவிந்தம், சீதா ராமம் மற்றும் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கென நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார். நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் அவர் பான் இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறார்.
கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
Rashmika Mandanna
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா நேற்று கேரளாவின் கொல்லத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரை பார்ப்பதற்காக 2000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று கூடினர். அப்போது மேடையில் விஜய் உடன் தான் சேர்ந்து நடித்திருந்த வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.
Rashmika Mandanna
வாரிசு படம் வெளியாகி 18 மாதங்களுக்கு மேல் ஆகியும் அந்த பாடலின் அசைவுகளை துளியும் மறக்காமல் மிகவும் ரசித்து க்யூட்டாக டான்ஸ் ஆடினார் ராஷ்மிகா. ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் ஆடிய ராஷ்மிகாவின் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Rashmika Mandanna
வம்சி படிபள்ளி இயக்கிய வாரிசு படத்தில் முதன் முறையாக விஜய் உடன் ஜோடி சேர்ந்திருந்தார் ராஷ்மிகா. இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் பலரின் ஃபேவரைட் படமாகவும் வாரிசு படம் உள்ளது.
Rashmika Mandanna
கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. உலகளவில் சுமார் 900 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் செய்தது.
Rashmika Mandanna
ராஷ்மிகா தற்போது புஷ்பா 2, தி கேர்ள்பிரண்ட் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் சிக்கந்தர் படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கிவரும் குபேரா படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.