- Home
- Gallery
- Ramya Pandian: மீண்டும் ஃபாமுக்கு வந்த ரம்யா பாண்டியன்! பிங்க் நிற லெஹங்காவில்... இடையழகை காட்டி மயக்கும் போஸ்
Ramya Pandian: மீண்டும் ஃபாமுக்கு வந்த ரம்யா பாண்டியன்! பிங்க் நிற லெஹங்காவில்... இடையழகை காட்டி மயக்கும் போஸ்
நடிகை ரம்யா பாண்டியன், கண் கொட்டாமல் பார்க்கும் பேரழகில்... பிங்க் நிற உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Ramya Pandian Photos
மிகப்பெரிய சினிமா பேக் கிரவுண்ட் இருந்தும், அதனை பயன்படுத்தி வாய்ப்பு தேடாமல்... தற்போது வரை தன்னுடைய திறமையை நிரூபிக்கும் படியான வாய்ப்புக்காக தமிழ் சினிமாவில் போராடி வருபவர் தான் ரம்யா பாண்டியன்.
Ramya Pandian Photos
தன்னுடைய சித்தப்பா ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்பதாலோ என்னவோ, சிறு வயதிலேயே நடிப்பின் மீது தீராத ஆசை வந்து மனதில் ஒட்டி கொண்டதால், கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள் இயக்கிய குரும்பப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே மெல்ல மெல்ல, 2015 ஆம் ஆண்டு டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
Divorce: திருமணமான நான்கே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த பிக்பாஸ் பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Ramya Pandian Photos
ஆனால் இப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு ரம்யா பாண்டியனுக்கு கிடைக்க அதை கட்சிதமாக பயன்படுத்தி கொண்டார். எனினும் அடுத்தடுத்த படங்களின் கதை தேர்வு சரியாக அமையாததால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
Ramya Pandian Photos
மிகவும் ஸ்மார்ட்டான நடிகையான இவர், அதிரடியாக சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.
Ramya Pandian Photos
இதன் மூலம் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் நடுவராகும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்திய ரம்யா பாண்டியன் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தும், வெற்றிபெறாமல் வெளியேறினார்.
Ramya Pandian Photos
பின்னர் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், அதில் இரண்டாவது ரன்னர் அப்பாக மாறினார். சின்னத்திரையில் இவரால் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு வெள்ளித்திரையில் கவரமுடியவில்லை என்பதே உண்மை.
Ramya Pandian Photos
தற்போது இவரின் கைவசம் இடும்பன் காரி என்கிற ஒரு படம் மட்டுமே உள்ள நிலையில்... பட வாய்ப்புக்காக மீண்டும் கலக்கலாக போட்டோ ஷூட் நடத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் பிங்க் நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.