- Home
- Gallery
- அந்த நடிகைகள் எல்லாம் திமிரு பிடிச்சவங்க.. ஆனா சௌந்தர்யா, த்ரிஷா அப்படி இல்ல.. ஓபனாக பேசிய ரம்பா..
அந்த நடிகைகள் எல்லாம் திமிரு பிடிச்சவங்க.. ஆனா சௌந்தர்யா, த்ரிஷா அப்படி இல்ல.. ஓபனாக பேசிய ரம்பா..
90களில் கொடிகட்டி பறந்த நடிகை ரம்பா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது பிடித்த நடிகை யார் என்பது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஓபனாக பேசி உள்ளார்.

90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். குறிப்பாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகைகளில் ரம்பாவும் ஒருவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் நடித்துள்ளார். தனது திரை வாழ்க்கையில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் ரம்பா நடித்துள்ளார்.
Rambha
1992-ம் ஆண்டு வெளியான சர்கம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 15 மட்டுமே. அவரின் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதே ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் என்ட்ரி கொடுத்த அவர் வெற்றி நாயகியாக வலம் வந்தார்..
பின்னர் 1993-ம் ஆண்டு தமிழில் உழவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ரம்பா. இந்த படத்தில் வரும் பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ பாடல் இன்று வரை பிரபலம். எனினும் ரம்பா கதாநாயகியாக அறிமுகமானது சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளத்தா படத்தில் தான்.
இதை தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, விஐபி, மின்சாரக் கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதே போல் சல்மான் கானுடன் ஜுட்வா மற்றும் பந்தன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமானார். ஒருக்கட்டத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸி நடிகையாக மாறினார் நடிகை ரம்பா. எனினும் தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்தார் ரம்பா.
இந்நிலையில், ரம்பா ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம் திரைத்துறையில் தோழி யார் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ திரைத்துறையில் எனக்கு மிகவும் பிடித்த நபர் என்றால் அது சௌந்தர்யா தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். மகேஸ்வரி தனது சிறந்த தோழி. திரைத்துறையில் மிகவும் நெருக்கமான தோழிகள் என்று யாருமில்லை." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ எந்த மாதிரியான காட்சி, டயலாக் பண்ணினாலும் ரம்யா கிருஷ்ணனுன் சேர்ந்து பணியாற்றும் போது மிகவும் பயமாக இருக்கும். அவர் என்னை விட சீனியர் என்பதால் அவருடன் நடிக்க தனக்கு பயமாக இருக்கும் “ என்று கூறினார்.
தற்போதைய தலைமுறையில் பிடித்த நடிகை யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரம்பா “ நயன்தாரா, த்ரிஷா, இலியானா, காஜல் என்று பல நடிகைகள் இருந்தாலும், த்ரிஷாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை ஓரிரண்டு முறை தான் நான் சந்தித்துள்ளேன். அவர் உணர்வுப்பூர்வமாக பேசினார். ஆனால் மற்ற நடிகைகள் அப்படி இல்லை. என்னை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள் என்று ரம்பா வெளிப்படுத்தினார்.
இதனிடையே கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்ய முடிவு செய்தார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.