- Home
- Gallery
- Raiza Wilson : திடீர்னு ஹோம்லி பொண்ணா மாறிய ரைசா.. ரெட் கலர் புடவையில் க்யூட் போஸ்.. நியூ போட்டோஸ்..
Raiza Wilson : திடீர்னு ஹோம்லி பொண்ணா மாறிய ரைசா.. ரெட் கலர் புடவையில் க்யூட் போஸ்.. நியூ போட்டோஸ்..
நடிகை ரைசா வில்சன் புடவையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Raiza Wilson Photos
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்களில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் புகழ் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
Actress Raiza
பிக்பாஸ் 1 நிகழ்ச்சிக்கு முன்பே, வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ரைசா ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதில் கஜோலின் உதவியாளராக அவர் நடித்திருப்பார்.
Raiza Wilson Latest Pics
தொடர்ந்து மாடலிங் செய்து வந்த ரைசாவுக்கு பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக விளையாடிய ரைசா 63 நாட்களில் வீட்டை விட்டு வெளியேறினார்.
Raiza Wilson in Saree
அதன்பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் ரைசா. தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதை வென்றார்.
Raiza Wilson Photos
இதை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, எஃப்.ஐ.ஆர், பொய்கால் குதிரை, காஃபி வித் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வர்மா படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் ரைசா.
Raiza Wilson viral photos
தமிழில் கடைசியாக கருங்காப்பியம் என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது தி சேஸ் என்ற தெலுங்கு படத்தில் ரைசா நடித்து வருகிறார்.
Raiza Wilson latest Photos
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Actress Raiza Wilson Photos
பெரும்பாலும் மார்டர்ன் ட்ரெஸ் மற்றும் கிளாமர் ட்ரெஸ்ஸில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். ஆனால் தற்போது புடவையில் படு க்யூட்டாக இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரைசா பதிவிட்டுள்ளார்.
Raiza Wilson
ரெட் கலர் புடவையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் அவரின் போட்டோக்களுக்கு லைக்களும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.