சினி உலகம்.. எல்லாருக்கும் இருக்கும் ஒரே Common நண்பினா அது ராதிகா சரத்குமார் தான் - Friendship Day Photos!
Radhika Sarathkumar : நடிகை ராதிகா சரத்குமார், இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
radhika
கடந்த 1978ம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கிழக்கே போகும் ரயில்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் ராதிகா சரத்குமார். முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது வென்றவர் இவர்.
உங்களால் தான் சம்பாதித்தோம்; உங்களுக்கே அள்ளி கொடுக்கிறோம் - கேரளாவுக்கு நிதி உதவி அளித்த நடிகர்கள்
chiranjeevi
தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என்று பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் ராதிகா சரத்குமார், சின்னத்திரை நாடகங்களிலும் கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Radhika
கோலிவுட்லுள்ள மெகா ஹிட் நடிகர்கள் மட்டுமல்லாமல், இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள சூப்பர் ஹிட் நடிகர்கள் அனைவரோடும் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் தான் ராதிகா சரத்குமார். கடந்த 46 ஆண்டுகளாக இவர் திரைத்துறையில் பயணித்து வருகிறார்.
Sripriya
சின்னத்திரையை பொருத்தவரை "சித்தி", "அண்ணாமலை" மற்றும் "மறுபிறவி" உள்ளிட்ட நாடகங்கள் இவருடைய நடிப்பில் மெகா ஹிட் ஆனது. குறிப்பாக "சித்தி" நாடகத்திற்கு இன்றளவும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது என்றால் அது மிகையல்ல.
Mohanlal
இன்று இந்திய அளவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், தனது திரையுலக சகாக்களோடு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒரு வீடியோவாக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார் ராதிகா சரத்குமார்.
சும்மா அடுக்கிகிட்டே போராருப்பா.. மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தல அஜித் - AK 64 அப்டேட் ஆன் தி வே!