- Home
- Gallery
- வரலட்சுமி திருமணம்.. சந்திரபாபு நாயுடுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கிய ராதிகா, சரத்குமார்
வரலட்சுமி திருமணம்.. சந்திரபாபு நாயுடுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கிய ராதிகா, சரத்குமார்
வரலட்சுமி திருமணத்திற்கு தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து ராதிகா, சரத்குமார் திருமண அழைப்பிதழை வழங்கினர்.

Varalaxmi sarathkumar
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடா படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தனது வெகு இயல்பான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
varalaxmi
எனினும் உடனடியாக தமிழில் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
அந்த வகையில் கன்னட நடிகர் சுதீப்புடன் இணைந்து மானிக்யா என்ற படத்தில் படத்தில் நடித்தார். இந்த படம் அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக மாறியது.
தொடர்ந்து மலையாள திரையுலகிலும் அறிமுகமான வரலட்சுமி மீண்டும் தமிழுக்கு வந்தார். பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன் போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர் திடீரென நெகட்டிவ் ரோலில் நடிக்க தொடங்கிய வரலட்சுமி சர்க்கார், சண்டக்கோழி 2, மாரி 2 போன்ற படங்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
இதனிடையே தனது உடல் எடையை குறைத்த வரலட்சுமி மீண்டும் ஃபிட்டாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
சமீபத்தில் ஹனுமான் படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். தற்போது தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இரு வீட்டார் சம்மதத்துடன் எளிய முறையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த ஜோடியின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக சரத்குமார் – ராதிகா சரத்குமார் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பிதழை வழங்கி வருகின்றன.
varalaxmi
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர். அதே போல்
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக பொறுப்பேற்க உள்ளவருமான சந்திரபாபு நாயுடுவை நேற்று டெல்லியில் சந்தித்த தேர்தல் வெற்றிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை வழங்கினர்.