ப்ரீத்தா ஹரி வீட்டில் நடந்த வரலட்சுமி பூஜை.. ஸ்ரீதேவி மிஸ்ஸிங்.. மகளுடன் கலந்து கொண்ட சினேகா..
நடிகை ப்ரீத்தா தனது வீட்டில் வரலட்சுமி பூஜை வெகு விமரிசையாக கொண்டாடி உள்ளார். இந்த பூஜையில் அவரது சகோதரி அனிதா விஜயகுமார், நடிகை சினேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Actress Pritha Vijayakumar
நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி மொத்தம் 3 மகள்கள் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் தான் கவிதா, அனிதா, அருண் விஜய். இதில் அனிதா தவிர விஜயகுமாரின் அனைத்து பிள்ளையும் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா விஜயகுமார் 1998-ம் ஆண்டு சந்திப்போமா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, மலையாள படங்களில் அவர் நடித்தாலும், தமிழில் படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து சுயம்வரம், அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
வரலட்சுமி விரதம்.. அம்மன் சிலை அருகே மற்றொரு சிலை.. அனிதா விஜயகுமாரின் க்யூட் போட்டோ..
இதனிடையே 2002-ம் ஆண்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திய ப்ரீத்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
விஜயகுமாரின் பிள்ளைகளில் சொத்து பிரச்சனை காரணமாக தற்போது தனியாக இருக்கிறார். வனிதா உடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. ஆனால் மற்ற பிள்ளை எந்த வேற்றுமையும் இன்றி ஒற்றுமையாக இருந்து வருகின்றனர்.அந்த வகையில் பண்டிகை, குடும்ப விழாக்களில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.
தமிழ் பெண்ணுடன் காதல் திருமணம்... நடிகர் மோகன்லாலின் அடிபொலி லவ் ஸ்டோரி தெரியுமா?
அந்த வகையில் இன்று வரலட்சுமி பூஜையை முன்னிட்டு ப்ரீத்தா ஹரி தனது வீட்டில் பூஜை நடத்தி உள்ளார். இந்த பூஜையில் ப்ரீத்தாவின் அக்கா அனிதா விஜயகுமார், நடிகை சினேகா தனது மகளுடன் கலந்து கொண்டார், சினேகாவின் அக்கா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதுதொடர்பான போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதில் ப்ரீத்தாவின் தங்கை ஸ்ரீதேவி கலந்து கொண்டாரா என்பது தெரியவில்லை.