- Home
- Gallery
- Nayanthara : இந்த 3 பேர் தான்.. இவங்க இல்லாம நயன்தாரா எங்கயுமே போகமாட்டாங்களாம்.. யாரு தெரியுமா?
Nayanthara : இந்த 3 பேர் தான்.. இவங்க இல்லாம நயன்தாரா எங்கயுமே போகமாட்டாங்களாம்.. யாரு தெரியுமா?
இந்த நிலையில் வெளிநாடு செல்லும் போதெல்லாம் நயன்தாரா வழக்கமாக செய்யும் செயல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார்.
20 ஆண்டுகளுக்கும் மேல் ஹீரோயினாக நடித்து வரும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகறார்.ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இதே போல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். அவர் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. பின்னர் இந்த தம்பதி வாடகை தாய் மூலம் பெற்றோரானார்கள். உயிர், உலக் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். குழந்தைகள் பிறகு பொறுப்புள்ள தாயாகவும் இருந்து வருகிறார்.
ஒருபக்கம் சினிமா, மறுபக்கம் கணவர் குழந்தை என பொறுப்புள்ள குடும்ப பெண்ணாக இருக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தற்போது ஹாங்காங் சென்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் வெளிநாடு செல்லும் போதெல்லாம் நயன்தாரா வழக்கமாக செய்யும் செயல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது குழந்தைகளுடன் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது தவறாமல் மூன்று செவிலியர்கள அழைத்து செல்வாராம்.
வெளிநாடு பயணத்தின் போது குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கு முதலுதவி கொடுக்கவே அவர் தன்னுடன் 3 செவிலியர்களை அழைத்து செல்வார் என்று கூறப்படுகிறது. எங்கு போனாலும் இந்த 3 செவிலியர் இல்லாமல் நயன்தாரா செல்லமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
அந்தளவு தன் குழந்தைகள் மீது மிகுந்த கவனத்துடன் நயன்தாரா இருந்து வருகிறாராம். அவர் தன் குழந்தைகளுடன் போடும் போட்டோக்களும், வீடியோக்களை பார்த்தாலே அவர் எந்தளவு தன் குழந்தைகள் மீது அன்புடன் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.