- Home
- Gallery
- Nayanthara: மலர்களே பொறாமை கொள்ளும் அழகு.! கால் முளைத்த பூவாய் பூந்தோட்டதை ரசிக்கும் நயனின் கியூட் போட்டோஸ்!
Nayanthara: மலர்களே பொறாமை கொள்ளும் அழகு.! கால் முளைத்த பூவாய் பூந்தோட்டதை ரசிக்கும் நயனின் கியூட் போட்டோஸ்!
நடிகை நயன்தாரா தன்னுடைய பிள்ளைகள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் ஹான்கான் சென்றுள்ள நிலையில், இவர் பூந்தோட்டத்தை ரசிக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Nayanthara Photos
கேரளாவில் பிறந்து, தமிழ் நாட்டு மருமகளாக மாறிய நடிகை நயன்தாரா 40 வயதை எட்டிய பின்னரும் செம்ம யங் லுக்கில் இருக்கிறார். இவரின் இளமைக்கு காரணம் என்ன என ரசிகர்கள் கேட்டால், சந்தோஷமாக இருங்கள், நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என தன்னுடைய பதிலால் அசர வைக்கிறார்.
Nayanthara Photos
நயன்தாராவின் இந்த வார்த்தையில் இருந்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது... எப்படி பட்ட பிரச்சனை சூழ்ந்து வந்து நம்பை தாக்கினாலும், அதனை தூக்கி அடித்து விட்டு நமக்கு பிடித்த விஷயங்களையும், நமக்காக இருப்பவர்கள் பற்றியும் யோசித்தால் நிச்சயம் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் என்பதே. இதனை ஒரு சில பேட்டிகளும் நயன் தெரிவித்துள்ளார்.
Nayanthara Photos
இவரது நடிப்பு, மற்றும் பர்சனல் கேரியரில் பல பிரச்சனைகள் வந்த போதும்... அதனை துளியும் அலட்டிக்கொள்ளாமல் கூலாக ஹாண்டில் செய்து, திரையுலகில் மீண்டும் உயர்ந்தார்.
Nayanthara Photos
நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கிய போது கூட... இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா? என சிலர் விமர்சனத்தை முன் வைத்த போது... அவற்றை காதில் கூட போட்டுக்கொள்ளாமல், 6 வருடம் காதலித்து பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
Nayanthara Photos
திருமணம் ஆன 4 மாதத்திலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா. குடும்பம், குழந்தை, நடிப்பு, தயாரிப்பு, பிஸ்னஸ் என இவரது வாழ்க்கை செம்ம ஹாப்பியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் ஹாங்கான் சென்றுள்ளார் லேடி சூப்பர் ஸ்டார்.
Nayanthara Photos
அடிக்கடி கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர்... தற்போது, அங்குள்ள பூங்காவுக்கு சென்ற போது... கண்ணாடியில் பிரதிபலிக்கும் விதமாக வளர்க்கப்படும் மலர்களுக்கு நடுவே நின்று எடுத்து கொண்ட போட்டோசை வெளியிட்டுள்ளார்.
Nayanthara Photos
இந்த புகைப்படத்தை பார்த்து.. கால் முளைத்த மலர் பூந்தோட்டத்தை வட்டமிட்டுகிறது என கவிதையாக வர்ணித்து, தங்களின் கமெண்ட்ஸ் வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.