- Home
- Gallery
- ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டேன்.! தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபு மீது மகள் லட்சுமி மஞ்சு குற்றச்சாட்டு!
ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டேன்.! தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபு மீது மகள் லட்சுமி மஞ்சு குற்றச்சாட்டு!
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மகளான லட்சுமி மஞ்சு ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டேன் என கூறியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’மறந்தேன் மன்னித்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான், தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கடல்’, ராதாமோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு மீண்டும் தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களில் பிஸியாகி விட்டார்.
46 வயதாகும் லட்சுமி மஞ்சு தன்னுடைய கேரியரை ஒரு நடிகையாக துவங்குவதற்கு முன்பே... தயாரிப்பாளராக துவங்கினார். இதுவரை 6 படங்களை தயாரித்துள்ள இவர், சின்னத்திரையிலும் ஒரு தொகுப்பாளராக மக்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். 2006-ஆம் ஆண்டு Andy Srinivasan என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மகள் ஒருவரும் உள்ளார்.
திருமணத்திற்கு பின்னரே நடிகையாக திரையுலகில் அறிமுகமான லட்சுமி மஞ்சுவுக்கு... வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், ஏனோ இதுவரை இவரால் கதாநாயகியாகவோ, அல்லது கதையின் நாயகியாகவோ நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இவர் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் தென்னிந்திய திரையுலகில் கிடைக்காததால் மும்பைக்கு சென்ற லட்சுமி மஞ்சு, அங்கேயே தங்கி பாலிவுட் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அண்மையில் பேசிய இவர் பாலிவுட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற ஆசையோடு அங்கு சென்றிருப்பதாக கூறினார்.
மேலும் தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஆணாதிக்கம் தான் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவர், நான் நடிகை ஆவதில் என்னுடைய அப்பாவுக்கு துளியும் விருப்பம் இல்லை. என் இரண்டு சகோதரர்களும் எளிதாகப் பெற்றதை பெற நான் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. நானும் ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவன் தான். இந்தப் போக்கு தென்னிலங்கையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளது என இவர் கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.