குஷ்புக்கு கோயில் எங்க இருக்கு பாருங்க! இடித்துவிடலாம்!அவங்கள பார்த்து சீமான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு
தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர் என்று சீமான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கொரோனா டெங்கு உள்ளிட்டவற்றை ஒழித்தது போல, சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், நடிகையும் தேசிய மகளிரணி ஆணையர் குஷ்பு தான் ஒரு இஸ்லாமிய பின்னணியை கொண்டவராக இருந்தாலும், மக்கள் எனக்காக கோயில் கட்டினார்கள். அதுவே சனாதன தர்மம் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அவரது கருத்திற்கு சீமான் பதிலடி கொடுத்திருக்கிறார்.
சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- குஷ்புவுக்கு கோவில் கட்டியது சனாதனம் இல்ல மாட்டு சாணம். அவருக்கு கோவில் கட்டியது ரசித்தால் என்ன மாதிரியான மனநிலை. இதை சனாதனம் என்று சொன்னால் அதை நீங்கள் ஏற்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.
உங்களுக்கு கோயில் கட்டி துதி பாடுவதை நீங்கள் ஏற்கிறீர்களா? இது தமிழர்களின் அறியாமையை, முட்டாள்தனத்தை, மூடத்தனத்தை காட்டுகிறது என்றார். மேலும், நடிகை குஷ்புவுக்கு கட்டிய கோவிலை இடிக்காமல் விட்டது தப்பு. அது எங்கள் பெருந்தன்மை. எங்க இருக்கு பாருங்க, குஷ்புவுக்கு கட்டிய கோவிலை இடித்து விடலாம் என்றார்.
மேலும் சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறில்லை. ஒருவர் சொன்ன கருத்துக்கு கருத்துடன் தான் மோத வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதை தவிர்த்து தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல. உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக கூறிய அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன். அவரின் தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர்கள் என சீமான் கூறியுள்ளார்.