மகனுடன் செம என்ஜாய்.. சின்சியர் டாடியாக மாறிய அட்லீ குமார் - போட்டோ எடுத்தது யார் தெரியுமா?
அண்மையில் பாலிவுட் உலகில் வெளியாகி சுமார் 800 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் தான் ஜவான். பாலிவுடில் தனது முதல் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டு, புகழின் உச்சிக்கே சென்றுள்ளார் இயக்குனர் அட்லி குமார் என்றால் அது மிகையல்ல.
Priya
கடந்த சில வருடங்களாகவே தனது ஜவான் திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்து வந்த அட்லீ குமார், தற்போது படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது மனைவி மற்றும் மகனுடன் தனது நேரத்தை தற்பொழுது செலவிட துவங்கியுள்ளார்.
விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி.. காதல் திருமணம் கைகூடியது எப்படி? முதலில் காதலை சொன்னது யார் தெரியுமா?
actress Priya
சில தினங்களுக்கு முன்பு அட்லி குமார் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருடைய மனைவி கிருஷ்ணா பிரியா, தன் மகன் மற்றும் கணவரோடு இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் பெரிய அளவில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Atlee Kumar
இந்நிலையில் விலங்குகள் சரணாலயத்திற்கு சென்ற அட்லி குமார், தனது மகனுக்கு யானை ஒன்றை காட்ட, அதை ஆச்சரியத்துடன் அவருடைய மகன் மீர் பார்ப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கிருஷ்ணா பிரியா.
அசோக் செல்வனை விட பல மடங்கு வசதி படைத்த கீர்த்தி பாண்டியன்! அருண் பாண்டியன் Net Worth இத்தனை கோடியா?