- Home
- Gallery
- Khushbu Sundar : அதற்குள் கல்யாணமா? அவந்திகா வேற ஒரு பிளான்ல இருக்கா - மகள் குறித்து மனம் திறந்த குஷ்பூ!
Khushbu Sundar : அதற்குள் கல்யாணமா? அவந்திகா வேற ஒரு பிளான்ல இருக்கா - மகள் குறித்து மனம் திறந்த குஷ்பூ!
Actress Khushbu Sundar : பிரபல நடிகை குஷ்பூ, கடந்த 2000வது தனது 30வது வயதில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்டார்.

khushbu sundar
தமிழ் திரையுலகில் 80களின் இறுதியில் இருந்து 90களின் இறுதி வரை டாப் நாயகியாக வலம்வந்தவர் தான் குஷ்பூ. இன்றளவும் ஒரு நடிகையாக கோவில் கட்டப்பட்டது குஷ்பூவிற்கு மட்டும் தான். தமிழ் திரையுலகில் அவர் ஜோடிபோட்டு நடிக்காத டாப் நடிகர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பல சூப்பர் ஹிட் ஹடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
மார்பக புற்றுநோயால் முடியை வெட்டிய பாலிவுட் நடிகை! மகளின் நிலையைக் கண்டு குமுறும் தாய்!!
Director Sundar c
கடந்த 1995ம் ஆண்டு வெளியான சுந்தர் சி அவர்களின் "முறை மாமன்" என்ற படத்தின் மூலம் தான் அவர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அதனை தொடர்ந்து 5 ஆண்டுகள் கழித்து 2000மாவது ஆண்டு அவர்களுக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்று இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தான் அவந்திகா.
Avanthika
அண்மையில் ஒரு பேட்டியில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பூ தனது மூத்த மகள் குறித்து மனம் திறந்துள்ளார். அவருடைய கல்யாணம் குறித்து கேள்விகேட்டபோது, அவந்திகாவிற்கு இன்னும் 24 வயது கூட நிறைவடையவில்லை. இன்னும் கொஞ்ச காலம் அவள் விருப்பம் போல செயல்படட்டும். அவளுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இப்பொது முளைத்துள்ளது. விரைவில் அவர் நடிகையாக அறிமுகமாவார்.
sundar c
ஆனால் தங்கள் படத்தில் அவரை அறிமுகம் செய்வதைவிட பிறர் படங்களில் அவரை நடிக்கவைக்கவே விரும்புவதாக கூறியுள்ளார் குஷ்பூ. மேலும் தனது கணவர் தொடர்ந்து கலகலப்பு 3 மற்றும் பிற பட பணிகளில் ஈடுபடவுள்ள நிலையில், அவர் இயக்கத்தில் அவந்திகா அறிமுகமாகவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.