வாரிசு படத்தில் எனக்கும் விஜய்க்கும் எமோஷனல் சீன் இருந்தது.. ரெண்டு பேருமே அழுதுட்டோம்.. குஷ்பு நெகிழ்ச்சி..
நடிகை குஷ்பு பிரபல யூடியூப் சேனலில் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது நடிகர் விஜய் குறித்தும், வாரிசு படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்தும் குஷ்பு பேசினார்.
Actress Khushbu
1988-ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்னத்தம்பி, என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்தார்.
Actress Khushbu
இதை தொடர்ந்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்தி, கமல், நெப்போலியன் என அப்போது முன்னணியில் இருந்த அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
Actress Khushbu
தமிழில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமார் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். ஆம். குஷ்புவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமை குஷ்புவுக்கு கிடைத்தது. ஆம். நடிகை குஷ்புக்கு கோயில் கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
Actress Khushbu
2000-ம் ஆண்டு நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். நடிகை, அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நபராக வலம் வருகிறார்.
Actress Khushbu
இந்த நிலையில் நடிகை குஷ்பு பிரபல யூடியூப் சேனலில் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். நடன இயக்குனர் கலா உடன் குஷ்பு கொடுத்திருக்கும் பேட்டியில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து குஷ்பு பேசினார். அப்போது நடிகர் விஜய் குறித்தும், வாரிசு படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்தும் குஷ்பு பேசினார்.
Khushbu Sundar
வாரிசு படத்தில் எனக்கும் விஜய்க்கும் நிறைய எமோஷனலான காட்சிகள் இருந்தது. மிகவும் அழகான உணர்வுப்பூர்வ காட்சிகள் இருந்து. படத்தில் எனக்கும் விஜய்க்கும் மட்டுமே சீன்கள் இருந்தது. வேறு எந்த நடிகருடன் காட்சிகள் இல்லை. ஆனால் படத்தின் நீளத்தின் அதிகமாக இருப்பதாக கூறி எனது காட்சிகளை நீக்குவதாக இயக்குனர் என்னை நேரில் சந்தித்து கூறினார்.
Actress Khushbu
அப்போது எனது ஒரு பிரேம் கூட இருக்கக்கூடாது என்று வம்சியிடம் கூறினேன். எனது காட்சிகளை டெலிட் செய்தால் மொத்தமாக டெலிட் செய்துவிட வேண்டும், ஒரு காட்சி கூட இருக்கக்கூடாது என்று இயக்குனரிடம் கூறிவிட்டேன்.. அவரும் அதற்கு ஓ.கே சொன்னார். வாரிசு படத்தில் வசனங்களை விட எனக்கும் விஜய்க்கும் நிறைய சைலண்ட் ஷாட் தான் இருந்தது. குறிப்பாக நிறைய எமோஷனல் சீன் தான் இருந்தது. படத்தின் படிப்பிடிப்பின் அந்த சீன்களில் போதே நானும் விஜய்யும் உண்மையிலேயே அழுதுட்டோம்.
Actress Khushbu
படம் ரிலீசான பிறகு நானும் விஜய்யும் மீட் பண்ணோம். அப்போது விஜய், உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு அழகான காட்சிகள் இருந்து என்று கூறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த காட்சிகள் இல்லை என்பது வருத்தமாக உள்ளது என்று கூறினார். விஜய் நிச்சயம் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருவார்” என்று குஷ்பு தெரிவித்தார்.