- Home
- Gallery
- தன்னைவிட இளம் நடிகர்.. காதல் வயப்பட்டாரா கீர்த்தி? - தளபதி ஸ்டைலில் அவரே கொடுத்த விளக்கம்!
தன்னைவிட இளம் நடிகர்.. காதல் வயப்பட்டாரா கீர்த்தி? - தளபதி ஸ்டைலில் அவரே கொடுத்த விளக்கம்!
Keerthy Suresh : 20 வயது நடிகர் மீது காதல் வயப்பட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று எழுந்த சர்ச்சைக்கு அவரே இப்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

Keerthy
மலையாள உலகில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்து வந்த சுரேஷ் குமாரின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். அவருடைய தாய் மேனகாவும் பல நல்ல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று தனது படிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ் இப்பொழுது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதிரடியாக சீரியலில் இறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்..! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு!
Keerthy suresh
குழந்தை நட்சத்திரமாகவே சில திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழில் "இது என்ன மயக்கம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தேசிய விருது வெல்லும் அளவிற்கு இன்று மிகச் சிறந்த நடிகையாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது சில கிசு கிசுக்களில் சிக்குவதும் குறிப்பிடத்தக்கது.
Keerthy Suresh Photos
பிரபல நடிகர்கள் சிலரோடு ஒன்றாக இணைத்து பேசப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், பிரபல இசையமைப்பாளர் அனிருதை டேட்டிங் செய்வதாகவும் அப்போது சில தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் அவர் ஹிந்தி மொழியில் நடித்துவரும் "பேபி ஜான்" என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவோடு மிக நெருக்கமாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
Actress Keerthy Suresh
இந்நிலையில் தன்னை விட இளம் நடிகரை அவர் காதலித்து வருவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ். "தளபதி விஜய் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு வதந்தியை பற்றி நாம் பேசும்பொழுது அது உண்மையாகி விடுகிறது. ஆகவே அதை பற்றி பேசாமலிருந்து அதை தவிர்த்துவிடுவதே சரியான வழி" என்று கூறியிருக்கிறார்.
"ஆபாசம் என் உடையில் இல்ல" - கழுவி ஊற்றிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த அமலா!