பிலிம் பேர் விருது வழங்கும் விழா.. கிளாமர் டால் போல வந்து அசத்திய ஜோதிகா - அவரே வெளியிட்ட ஹாட் பிக்ஸ்!
Actress Jyothika : அண்மையில் நடந்து முடிந்த 69வது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில், பங்கேற்று அசத்தியுள்ளார் கோலிவுட் நாயகி ஜோதிகா.
jyothika
மும்பையில் பிறந்து கடந்த 1998ம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் ஜோதிகா. அதன் பிறகு கோலிவுட் நாயகியாக அவர் மாறினார்.
actress jyothika
அஜித் குமார் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான "வாலி" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த நடிகை ஜோதிகா, அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் தான் "பூவெல்லாம் கேட்டுப்பார்".
Filmfare Awards
தொடர்ச்சியாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பயணித்து வரும் நடிகை ஜோதிகா, தற்பொழுது மீண்டும் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு பாலிவுட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
Filmfare
தனது பிள்ளைகளின் படிப்புக்காக மும்பை சென்றிருந்த நடிகை ஜோதிகா, தற்பொழுது சென்னைக்கு பெரிய அளவில் வருகை தராமல். மும்பையிலேயே தனது குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தொடர்ச்சியாக அவர் பல பாலிவுட் படங்களிலும் நடிக்க உள்ளார்.
kollywood actress joe
இந்நிலையில் அண்மையில் நடந்த 69வது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில், கவர்ச்சிகரமான ஆடை அணிந்து ஜோதிகா பங்கேற்றது, அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
Shriya Saran: 40 வயதை கடந்த போதிலும் கவர்ச்சியில் துளியும் குறை வைக்காத ஸ்ரேயா சரண்