ட்ரெடிஷனலாக வந்த ஜான்வி கபூர்.. பிளவுஸ் மட்டும் ரூ 47,000 - அப்போ சேலையின் விலை எவ்வளவு இருக்கும்?
Janhvi Kapoor : பிரபல நடிகை ஜான்வி கபூர், தான் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அழகிய புடவை ஒன்று கட்டிவந்து அசத்தியுள்ளார். அது இப்பொது வைரலாகி வருகின்றது.
Actress Janhvi Kapoor
பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் ஆசை மகள் நான் ஜான்வி கபூர். நடிகை ஸ்ரீதேவி காலமான அதே 2018ம் ஆண்டு நடிகையாக பாலிவுட் உலகில் ஜான்வி கபூர் களமிறங்கினார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி திரையுலகில் நல்ல பல திரைப்படங்களில் நடித்து அவர் புகழ் பெற்று வருகிறார்.
பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கியவர் இவர் தானாம்.. ஆத்தி இவ்வளவா?
Janhvi Kapoor
இளம் வயது முதலேயே ஒரு நட்சத்திர குழந்தையாக பிறந்து வளர்ந்த ஜான்வி கபூர், மாடர்ன் உடைகளை காட்டிலும் புடவையை அணியத்தான் மிகவும் விரும்புவார் என்று கூறப்படுகிறது. இன்று அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியிலும் கூட பச்சை நிற பிளவுஸும், சிவப்பு நிற புடவையும் அணிந்து வந்து அங்கு இருக்கும் அனைவரையும் அசரடித்தார்.
Janhvi Kapoor Viral Saree
இந்நிலையில் இன்று ஜான்வி கபூர் அந்த விழாவிற்கு சுமார் 46,500 ரூபாய் மதிப்புள்ள பிளவுஸ் ஒன்றை அணிந்து வந்ததாகவும். மேலும் அவர் அணிந்திருந்த அந்த புடவையின் விலை சுமார் 1.15 லட்சம் ரூபாய் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அந்த சேலையில் சிவப்பு மயில்போல மின்னினார் ஜான்வி என்றே கூறலாம்.
Actress Janhvi Kapoor Viral Photos
ஜான்வி கபூருக்கு புடவை மீதுள்ள காதல் என்பது, அவர் அடிக்கடி அணியும் எளிமையான புடவைகள் மூலமே தெரியும். பொதுவாக ஜான்விக்கு மிகவும் பிடித்தமான டிசைனர்களில் ஒருவரான மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த புடவைகளை தான் அணிந்து வெளியிடங்களுக்கு செல்வார். ஆனால் இந்த முறை தோரனி என்ற பிராண்டின் சேலையை அணிந்து அவர் வெளியில் சென்றுள்ளார். 'சரோஜா ரமணி புடவை' என்று அந்த புடவை பெயரிடப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்கலாம்.
டிஸ்கோ சாந்தியின் மறுபக்கம்: குடிப்பழக்கத்திற்கு அடிமையாக காரணம் என்ன?