- Home
- Gallery
- இந்த மனசு தான் கடவுள்..! ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து அன்பால் உருக வைத்த தர்ஷா குப்தா!
இந்த மனசு தான் கடவுள்..! ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து அன்பால் உருக வைத்த தர்ஷா குப்தா!
நடிகை தர்ஷா குப்தா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து... அவர்களின் அன்பு மழையில் நனைந்த புகைப்படங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Dharsha gupta:
ஒரு சிலர் தங்களின் தேவைகளுக்காக சேர்த்து வைக்க, சம்பாதிக்க ஓடி கொண்டிருந்தாலும்... பிரபலங்கள் சிலர் தாங்கள் நடித்து சம்பாதித்த பணத்தை பிறருக்கு கொடுக்கு அவர்களின் புன்னகையில் மகிழ்ச்சியை காண்கின்றனர்.
Celebrities Help:
அந்த வகையில், சூர்யா, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, கார்த்தி, போன்றவர்கள் பெரிய அளவில் உதவிகளை செய்தாலும், விஜய் விஸ்வா, KPY பாலா, அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் தங்களின் ஊதியத்திற்கு தகுந்தாப்போல் பலருக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார்கள்.
Dharsha gupta donate foods:
இவர்களின் வரிசையில், நடிகை தர்ஷா குப்தாவும் இணைந்துள்ளார். கொரோனா காலத்தில், இவர் பலருக்கு தன்னுடைய வீட்டில் உணவுகள் செய்து அதை தெருக்களில் வாழும் மக்களுக்கு கொடுத்தவர். அதே போல் தன்னுடைய பிறந்தநாள், வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால்... அதனை மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டாடி வருகிறார்.
Dharsha gupta viral photos:
தற்போது தர்ஷா குப்தா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார். மேலும் அவர்களின் அன்பு மழையில் நனைந்த தருணம் குறித்த புகைப்படங்களை இவர் வெளியிட, அந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Serial Actress Dharsha Gupta:
தர்ஷா குப்தா மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை துவங்கி... பின்னர்2018 ஆம் ஆண்டு.. ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் வில்லியாக நடித்து மிகவும் பிரபலமானவர். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூர பூவே சீரியலில் நடித்த இவர்... அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியி ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.
Cook With Comali Fame Dharsha Gupta:
குக் வித் கோமாளி வாய்ப்பு தர்ஷா குப்தாவுக்கு, ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தர்ஷா குப்தா, ஆதரவற்ற குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
51 வயதிலும் இப்படியா? தோழிகளுடன் 3 ரோஸஸாக மாறி ஆச்சரியப்படுத்திய அனிதா விஜயகுமாரின் போட்டோஸ்!