- Home
- Gallery
- 40 வயதுக்கு மேலாகியும் திருமணமாகல... பாகுபலி நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகையா இது? ஆனா திரிஷா இல்ல
40 வயதுக்கு மேலாகியும் திருமணமாகல... பாகுபலி நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகையா இது? ஆனா திரிஷா இல்ல
40 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வரும் பிரபல நடிகை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

anushka
சினிமா நடிகைகள் அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்குவதுண்டு. அப்படி காதல் கிசுகிசுவில் சிக்கினாலும் 42 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் பிரபல நடிகை இன்று சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் கைவசம் படவாய்ப்புகள் இன்றியும் தவித்து வருகிறார். அன்று இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க க்யூவில் நின்ற நடிகர்கள் இன்று அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போயுள்ளார்.
anushka shetty childhood photos
அந்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை அனுஷ்கா ஷெட்டி தான். இவரது இயற்பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. சினிமாவுக்காக தன் பெயரை மாற்றிக் கொண்ட இவர், தமிழில் சுந்தர் சி இயக்கிய ரெண்டு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா, அதன்பின்னர் டோலிவுட்டில் பிசியானார். அங்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், நடித்த படமெல்லாம் ஹிட்டானதால் ராசியான ஹீரோயினாக உருவெடுத்தார்.
anushka wih her mom
பின்னர் கோலிவுட்டிலும் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வந்தார் அனுஷ்கா. டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா, கதையின் நாயகியாக நடித்த முதல் படமான அருந்ததி வேறலெவலில் ஹிட் அடித்ததோடு, அனுஷ்காவின் மார்க்கெட்டையும் தூக்கி நிறுத்தியது. அருந்ததி படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் ராஜமவுலி, அவரை பாகுபலி படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார்.
இதையும் படியுங்கள்... மறக்காம வந்துருங்க முதல்வரே... மகள் திருமணத்திற்காக ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த சரத்குமார்
Anushka shetty Photos
பாகுபலி படத்தில் தேவசேனையாக நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அனுஷ்கா. அப்படத்தின் இரண்டு பாகங்களும் மாஸ் ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக இவர் தேர்வு செய்து நடித்த இஞ்சி இடுப்பழகி திரைப்படம் அனுஷ்காவின் கெரியரை தலைகீழாக புரட்டிப் போட்டது. அப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்து நடித்த அனுஷ்கா, அதன்பின் உடல் எடையை குறைக்க முடியாமல் படாதபாடு பட்டார். இதனால் அவரது மார்க்கெட்டும் டோட்டலாக காலியானது.
Anushka pics
யோகா டீச்சரான இவர் யோகா பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்தாலும் அவரது வயதும் 40ஐ தாண்டிவிட்டதால் அனுஷ்காவுக்கு மவுசு இல்லாமல் போனது. தற்போது 42 வயதாகும் அனுஷ்காவுக்கும் தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு படம் கூட கைவசம் இல்லை. மலையாளத்தில் கத்தனார் என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் பாகுபலி படத்தில் நடித்தபோது அப்படத்தின் நாயகன் பிரபாஸை காதலிப்பதாக கிசுகிசுக்கள் உலா வந்தன.
anushka childhood photos
ஆனால் இருவருமே தாங்கள் நண்பர்கள் என்று சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். பிரபாஸ் உடனான காதல் கிசுகிசு முடிவுக்கு வந்தாலும் அனுஷ்கா தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அண்மையில் செய்திகள் உலா வந்தன. இப்படி சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் அனுஷ்காவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Premgi : களைகட்டிய பிரேம்ஜியின் பேச்சிலர் பார்ட்டி... படையெடுத்து வந்து கலந்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள்