கோட் மட்டும் போட்டு வித்யாசமான Photo Shoot.. கவர்ச்சியில் எல்லை மீறும் ஆண்ட்ரியா - ஹாட் பிக்ஸ்!
Actress Andrea : சிறந்த நடிகையாகவும், சூப்பர் ஹிட் பாடகியாகவும் இந்திய திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வருபவர் தான் ஆண்ட்ரியா, அவருக்கு வயது 38.
Actress Andrea Jeremiah
சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை ஆண்ட்ரியா, தனது இளம் வயது முதலிலேயே மாடலிங் துறையில் பயணித்து வருகிறார். முதல் முதலில் ஒரு காபி விளம்பரத்தில் நடித்து தான் தனது மீடியா பயணத்தை அவர் தொடங்கினார். அதன் பிறகு பாடகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
தாழ்த்தப்பட்ட மக்களில் வலியை பேசும் 'வாழை'; வெளியானது ட்ரைலர்..!
Actress Andrea Jeremiah
"அந்நியன்" திரைப்படத்தில் ஒலித்த "கண்ணும் கண்ணும் நோக்கியா" என்கின்ற பாடல் தான் ஆண்ட்ரியா முதல் முதலில் பாடிய பாடல். அந்த பாடலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு, அவரை நடிகையாகவும் மாற்றியது. கடந்த 2007ம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "பச்சைக்கிளி முத்துச்சரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.
Andrea Jeremiah New Photo Shoot
தொடர்ச்சியாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்த நடிகையாகவும் பிரபல பாடகியாகவும் இவர் கடந்த 19 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். 38 வயதாகும் நடிகை ஆண்ட்ரியா இப்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.
Actress Andrea Jeremiah
இறுதியாக தமிழில் கடந்த மார்ச் மாதம் வெளியான "கா - The Forest" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, தற்பொழுது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திலும், நோ என்ட்ரி என்கின்ற திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் அந்த இரு படங்களும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.