- Home
- Gallery
- இவரெல்லாம் ஹீரோ? விஜயகாந்தை அவமானப்படுத்திய ஹிந்திக்காரர்கள்.. அடிக்க சென்ற குஷ்பு.. தரமான சம்பவம்..
இவரெல்லாம் ஹீரோ? விஜயகாந்தை அவமானப்படுத்திய ஹிந்திக்காரர்கள்.. அடிக்க சென்ற குஷ்பு.. தரமான சம்பவம்..
நடிகர் விஜயகாந்த் உயிரிழந்ததில் இருந்து அவரின் நினைவுகளை அவருடன் பணியாற்றியவர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்துக்காக தான் சண்டைக்கு சென்ற சம்பவம் குறித்து நடிகை குஷ்பு பேசி உள்ளார்.

vijayakanth
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அவர் ரஜினி, கமலுக்கு அடுத்த பெரிய ஹீரோவாகவும் இருந்தார். உச்சத்தில் இருந்தாலும் அனைவருடன் எளிமையாக பழகும் குணம் கொண்ட அவர், திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கும் என்ணற்ற உதவிகளை செய்துள்ளார்.
Vijayakanth
தற்போது உச்ச நடிகர்களாக விஜய், சூர்யா போன்றோருக்கு அவர்களின் திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் விஜயகாந்த் பல உதவிகளை செய்துள்ளார். புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பல முன்னணி இயக்குனர்களை உருவாக்கி உள்ளார். மேலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக சம்பளம் வாங்காமலே பல படங்களில் நடித்து கொடுத்துள்ளார்.
vijayakanth
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தேர்தல்களில் பல வெற்றிகளை சுவைத்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் களத்தில் அவர் சந்தித்த துரோகங்களும், தோல்விகளும் அவரை பெரிய அளவில் பாதித்தது. அதோடு உடல் நிலையும் சரியில்லாமல் போகவே அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வந்த அவர் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வந்தார்.
Vijayakanth
பின்னர் விஜயகாந்திற்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே அவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்திற்காக நடிகை குஷ்பூ சண்டைக்கு சென்ற சம்பவம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குஷ்புவே சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசி உள்ளார். அப்போது “நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது எந்த ஈகோவும் பார்க்காமல் வேலை செய்த ஒரே கலைஞர் என்றால் அது விஜயகாந்த் தான். தமிழ் சினிமாவில் பெப்சி பிரச்சனை நடந்து கொண்டிருந்த போது மும்பையில் இருந்து பல தொழில்நுட்ப கலைஞர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நான், விஜய்காந்த்ய் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றிருந்தோம். ஆனால் அங்கு விஜயகாந்த் சார் அமர ஒரு சேர் கூட வைக்கவில்லை. அங்கிருந்த ஹிந்திக்காரர்கள் அனைவரும் பெட்டில் உட்கார்ந்து கொண்டு விஜயகாந்தை இவரெல்லாம் ஒரு ஹீரோ என்று ஹிந்தியில் கிண்டல் செய்தனர். இதை கேட்ட உடன் நான் சண்டைக்கு போயிட்டேன்..
kushboo
விஜயகாந்த் சார் தான் என்னை பிடித்து வந்தார். நமக்கு வேலையாக வேண்டும் சண்டை போடாத என்று என்னை சமாதானம் செய்தார். சார்.. உங்கள பத்தி தப்பா பேசு நான் அடிச்சுருவேன்.. என்று கூறினேன். இல்லை விட்டுக்கொடு.. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேள்.. நமக்கு பின்னாடி 200 குடும்பங்கள் உள்ளது. ஒரு பிரச்சனைன்னா அதை சுமூகமாக கையாண்டு அதை தீர்த்து வைத்துவிடுவார். அவரை மாதிரி யாருக்குமே இருக்க முடியாது. திரைத்துறையில் எந்த ஒரு தொழில்நுட்ப கலைஞரும் விஜயகாந்த் எனக்கு ஒரு உதவி கூட செய்யவில்லை என்று சொல்லமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.