- Home
- Gallery
- எதிர்கட்சியா இருந்தா என்ன? கமலுக்கும், கனிமொழிக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்த ராதிகா - வைரல் பிக்ஸ்!
எதிர்கட்சியா இருந்தா என்ன? கமலுக்கும், கனிமொழிக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்த ராதிகா - வைரல் பிக்ஸ்!
Varalaxmi Sarathkumar Marriage : பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த மார்ச் மாதம் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Kamal
பெங்களூரில் கடந்த 1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி பிறந்த பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், விக்னேஷ் சிவனின் "போடா போடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
Sarath
தொடர்ச்சியாக கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Kanimozhi
மேலும் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள "ராயன்" என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Varalaxmi
கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரலட்சுமி சரத்குமாருக்கு நிக்கோலை சச்தேவ் என்பவரோடு திருமண நிச்சயம் நடந்து முடிந்தது. இந்நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளது.
Radhika
ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்த ராதிகா சரத்குமார், தற்பொழுது திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கனிமொழி மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்வர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளார்.