"எங்க அப்பா போய்ட்டாரு.. நீங்க பேசுற மாதிரி என் லைப் இல்லடா" மனம் விட்டு அழுத அனிதா சம்பத் - என்ன ஆச்சு!
Anitha Sampath : பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை அனிதா சம்பத் தனது தந்தையின் இறப்பு மற்றும் தாய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Bigg boss
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத், தமிழில் "காப்பான்", "தெய்வ மச்சான்" மற்றும் "காலங்களில் அவள் வசந்தம்" போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் கடந்த 2020ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் இவர் பங்கேற்றார்.
முதல்ல பாலிவுட்.. இப்போ மோலிவுட்.. SK23 - மலையாளத்தில் இருந்து மாஸ் நடிகரை களமிறக்கும் AR முருகதாஸ்!
Actress Anitha
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து தன்னுடைய தாய் மற்றும் தந்தையின் கனவுகளை நிறைவேற்றும் ஆசையோடு வந்த அனிதா சம்பத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் மனம் திறந்து இருக்கிறார்.
Anitha sampath
"பிக் பாஸில் நான் இருந்த பொழுது என் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது, இப்பொது வரை அதை பற்றி நான் பெரிய அளவில் கவலைப்பட்டதில்லை. ஆனால் பிக் பாஸ் முடிந்து நான் திரும்பியபோது எனக்கு ஏற்பட்ட இழப்பை தான் என்னால் மறக்கமுடியவில்லை. BB செல்வதற்கு முன் என்னுடைய தாய், தந்தை மற்றும் கணவருக்கு விடைகொடுத்துவிட்டு சென்றேன்".
Actress Anitha Husband
"85 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நான் பங்கேற்றேன், அதன்பிறகு நான் வெளியே வந்ததும் 15 நாள் தனிமைப்படுத்தப்பட்டேன். மொத்தம் 100 நாட்கள் கடந்து என் தந்தையை காண சென்ற பொழுது அவர் உடலை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. 100 நாட்களுக்கு முன்பு அவருக்கு டாட்டா காட்டி விட்டு சென்ற அந்த நினைவுகள் மட்டுமே என்னிடம் இருந்தது. அப்போது என் மன நிலையை நினைத்து பாருங்கள், ஆனால் அப்போது கூட நான் போட்ட இன்ஸ்டா பதிவிற்காக என்னை அப்படி நோகடித்தார்கள்".
Anchor Anitha sampath
"என் தந்தையை வெளிநாடுகளுக்கு டூர் கூட்டிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதற்காகத்தான் பிக் பாஸ்க்குள்ளேயே வந்தேன். அங்கு இருக்கும்போது கூட கம்மி பட்ஜெட்டில் எங்கு டூர் செல்லலாம் என்று தான் அடிக்கடி பேசுவேன், என் தாய் அவருடைய தாலியை அடகு வைத்துதான் என்னை படிக்கவைத்தார். அவருக்கு 5 பவுனில் தாலி செயின் செய்ய விரும்பினேன். ஆனால் இப்பொது யாரை தான் டூர் கூட்டிசெல்வென், என் அம்மாக்கு தாலி வாங்கிக்கொடுக்க முடியுமா?, ஆனால் நான் என்னமோ சந்தோஷமாக இருப்பதுபோல என்னை திட்டுகிறார்கள்" என்று மனம் நொந்துள்ளார் அவர்.